Ravindra Jadeja : வாள் தூக்கி நின்னான் பாரு! ஆஸ்திரேலியாவில் அசத்தும் ஜடேஜா.. போராடும் இந்திய அணி
Ravindra Jadeja: ஆஸ்திரேலிய மண்ணில் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் சராசரி 56.50 உள்ளது, மேலும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 அரைசதங்கள் அடித்துள்ளார்.
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜடேஜா அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடர்:
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதனத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீசுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ஆபார சதத்தால் 445 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இந்திய அணி சொதப்பல்:
அடுத்து தனது முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர், அதன் பிறகு கே.எல் ராகுல் மட்டும் ஒரு முனையில் நின்று போராட ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மானத்தை காப்பற்றிய ஜடேஜா:
அடுத்ததாக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா ராகுலுடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார், கே.எல் ராகுல் 84 ரன்கள் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜடேஜா தனது 22வது டெஸ்ட் அரை சதத்தை அடித்து அசத்தினார். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது மூன்றாவது அரைசதத்தையும் ஜடேஜா பதிவு செய்தார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஜடேஜா 56.50 என்கிற சராசரியையும் வைத்துள்ளார்.
And the famous sword celebration is out... ⚔#RavindraJadeja completes a fine half-century under pressure, as #TeamIndia marches on post Lunch break!#AUSvINDOnStar 👉 3rd Test, Day 4 | LIVE NOW on Star Sports! #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/jt7CsSe9Md
— Star Sports (@StarSportsIndia) December 17, 2024
ஜடேஜா படைத்த சாதனைகள்:
கீழ் வரிசையில் 6 வது வீரராக களமிறங்கி அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் விவிஎஸ் லக்ஷ்மனுக்கு அடுத்தப்படியாக ரவீந்திர ஜடேஜா உள்ளார். மேலும் 2022க்கு பிறகு இந்திய அணிக்காக அதிக சராசரி வைத்திருந்த மூன்றாவது வீரர், அதிக விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது வீரர் என்கிற பெருமை ஜடேஜாவுக்கு உள்ளது.