England Cricket Update: இங்கிலாந்து கிரிக்கெட்டின் கருப்பு பக்கம்: நிறவெறி தாக்குதலை அம்பலப்படுத்திய முன்னாள் கேப்டன்!
நிறவெறி தாக்குதலால் தன்னுடைய கிரிக்கெட் கரியர் முடிந்துவிட்டதாக கண்ணீர் மல்க அசீம் வைத்த குற்றச்சாட்டு கிரிக்கெட்டின் கருப்பு பக்கமாக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்து யோர்க்ஷயர் கிரிக்கெட் க்ளப்புகாக விளையாடியவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசீன் ரஃபீக். ஆல்ரவுண்டரான இவர் இங்கிலாந்து அணி U15, U19 கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். இந்நிலையில், யோர்க்ஷயர் கிரிக்கெட் க்ளப்பில் நிறவெறி தாக்குதல் அதிகமாக உள்ளது என இவர் வைத்த குற்றச்சாட்டு இங்கிலாந்து கிரிக்கெட்டை உலுக்கியுள்ளது.
இங்கிலாந்து U15, U19 அணிகளுக்கு அசீம் கேப்டனாக இருந்தபோது, இப்போதைய கிரிக்கெட் நட்சத்திரங்களான ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அந்த அணியின் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், நிறவெறி தாக்குதலால் தன்னுடைய கிரிக்கெட் கரியர் முடிந்துவிட்டதாக கண்ணீர் மல்க அசீம் வைத்த குற்றச்சாட்டு கிரிக்கெட்டின் கருப்பு பக்கமாக பதிவாகியுள்ளது.
மைக்கேல் வாகன், கேரி பேலன்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவில் லாயிட், மேத்யூ ஹோகர்ட், டிம் ப்ரெஸ்னன், ஆண்ட்ரூ கேல், மார்டின் மோக்சோன், ஜோ ரூட் என இவர் ஒன்பது பேர் மீது நிறவெறி குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். 2008-2014 வரையிலும், 2016-2018 வரையிலான காலக்கட்டத்திலும் சிறப்பாக விளையாடிய அசீமின் கிரிக்கெட் கரியர் நிறுத்தப்பட காரணம் நிறவெறி தாக்குதால் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
”புரியாத நிறவெறி சொற்களால் என்னை அடையாளப்படுத்தி உள்ளார்கள். என்னை மட்டுமல்ல, அடில் ரஷீத், அஜ்மல், ராணா உள்ளிட்ட வீரர்களையும் க்ளப்பில் அப்படியே அழைத்தனர். அவன் ஒரு பாகிஸ்தானி, அவனிடம் ஏன் பேசுகிறீர்கள் என குறை சொல்லி இருக்கிறார்கள். யோர்க்ஷயர் அணிக்காக விளையாடும்போது பல முறை நான் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளேன். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். நிறவெறி தாக்குதல் குறித்து க்ளப் சார்ப்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என அசீம் தெரிவித்திருக்கிறார்.
நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு அசீம் புகார் அளித்து சட்ட ரீதியாக இந்த பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறார். இந்த வழக்கு விசாரணைதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு சில வீரர்கள் மன்னிப்பு கேட்டிருந்தாலும், இன்னும் பலர் மெளனம் காக்கின்றனர். மேலும், சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் இன்னும் இது பேசு பொருளாக மாறாமல் இருப்பது இங்கிலாந்து கிரிக்கெட்டின் பலத்தையே காட்டுகிறது. பிரச்சனைகள் மூடி மறைக்கப்படுகின்றது, வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படாமல் ஒளித்து வைக்கப்படுவதே உண்மை என இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட்டும் மற்ற நாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
அசீம் வைத்த குற்றச்சாட்டு:
Spectacular courage from Azeem Rafiq giving this testimony.
— Oli Dugmore (@OliDugmore) November 16, 2021
So so grim pic.twitter.com/njq1ROF2fi
இந்நிலையில் ப்ரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் அசீமுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருக்கிறார். ”உண்மையை வெளியில் சொன்ன அசீமுக்கு பாராட்டுகள்.இங்கிலாந்து கிரிக்கெட்டும், யோர்க்ஷயர் கிரிக்கெட்டும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார். இதனால், இந்த வழக்கை எடுத்து நடத்த இங்கிலாந்து கிரிக்கெட், யோர்க்ஷயர் கிரிக்கெட்டுக்கு அழுத்தம் கூடி உள்ளது.
Brave testimony from Azeem Rafiq. I commend him for speaking out.
— Boris Johnson (@BorisJohnson) November 16, 2021
There is no excuse for racism anywhere in society and we expect @EnglandCricket and @YorkshireCCC to take immediate action in response to these allegations. https://t.co/otvysu75c9
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்