மேலும் அறிய

Debut Test Match Century: அறிமுக டெஸ்ட்டில் சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா? முழு ரிப்போர்ட் இதோ..!

Debut Test Century: டெஸ்ட் போட்டியில் முதல் முதலில் களமிறங்கி அந்த முதல் போட்டியிலேயே முதல் சதம் அடித்த வீரர்களின் பட்டியல்

இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. இது இங்கிலாந்து நாட்டில் உருவாகி இருந்தாலும், ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தாலும் இன்றுவரை இந்தியர்களின் மனதை கவர்ந்த வண்ணமே உள்ளது. இதுவரை கிரிக்கெட் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என்றும் மூன்று விதமான போட்டிகள்  சர்வதேச அளவில் விளையாடப்படுகிறது.  தற்போது இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி 20  தரவரிசையில் முதல் இடத்திலும், ஒருநாள் தரவரிசையில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட்டை வலுப்படுத்தவும் இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தவும் பல விதமான போட்டிகள் நடந்து கொண்டே இருகிறது. தமிழக அளவில் டி.என்.பி.எல் என்றும்  இந்தியா அளவில்  ஐ.பி.எல் என்றும்  இளம் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாகியுள்ளது. இந்த தொடர்களில் மூலம்தான் பல வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், நடராஜன், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற பலர்  இந்த தொடரின் மூலம்தான் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளனர். 

இப்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது அறிமுகப் போட்டியில் சதம் விளாசி உலக கிரிக்கெட் அரங்கையே தன்பக்கம் ஈர்த்துள்ளார். இதற்கு முன்னர்  அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியவர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 

Debut Test Match Century:  அறிமுக டெஸ்ட்டில் சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா? முழு ரிப்போர்ட் இதோ..!

முதல் போடியிலேயே சதம் அடித்த இந்திய வீரர்கள்

இந்திய அணிக்காக விளையாடி தனது முதல் டெஸ்ட் போட்டியில்  இதுவரை 17 இந்திய வீரர்கள் சதம் அடித்து அசத்தியுள்ளனர்.இந்த பட்டியலில் அறிமுக போட்டியில் சதம் அடித்த வீரர் லாலா அமர்நாத். இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டியில் 118 ரன்கள் எடுத்து அசத்தினார்.  அதன் பின்னர், தீபக் சோதன் (110), ஏஜி கிருபால் சிங்(100*), அப்பாஸ் அலி பெய்க்(112), ஹனுமந்த் சிங்(105), குண்டப்பா விஸ்வநாத்(137), சுரிந்தர் அமர்நாத்(124), முகமது அசாருதீன்(110), பிரவீன் ஆம்ரே(103), சவுரவ் கங்குலி(133), வீரேந்திர சேவாக்(105), சுரேஷ் ரெய்னா(120), ஷிகர் தவான்(187), ரோஹித் ஷர்மா(177), பிரித்வி ஷா(134), ஸ்ரேயாஸ் ஐயர்(105) கடைசியாக சதம் வீளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்(154*) என மொத்தம் 17 வீரர்கள் தனது முதல் டெஸ்ட் போடியிலேயே சதம் அடித்த அசத்தியவர்கள்

இந்திய அணியின் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர்கள் 

Debut Test Match Century:  அறிமுக டெஸ்ட்டில் சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா? முழு ரிப்போர்ட் இதோ..!

1.ஷிகர் தவான் (187)

ஷிகர் தவான் 2013 ஆம் ஆண்டு மொஹாலி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் வெறும் 174 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட ஷிகர் தவான் 33 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என்று மொத்தம் 187 ரன்கள் அடித்து மிரளவைத்தார். இந்திய அளவில் இவர் தான் இதுவரை அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையுடன் உள்ளார். 

Debut Test Match Century:  அறிமுக டெஸ்ட்டில் சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா? முழு ரிப்போர்ட் இதோ..!

2.ரோகித் ஷர்மா (177)

ரோகித் ஷர்மா 2013 ஆம் ஆண்டு கொல்கத்தா உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் 177 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Debut Test Match Century:  அறிமுக டெஸ்ட்டில் சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா? முழு ரிப்போர்ட் இதோ..!

3.யஷஸ்வி ஜெய்ஸ்வால் (154*)

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுபயணம் சென்றுள்ளது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஓடிஐ மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 367 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகளுடன் 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

4.குண்டப்பா விஸ்வநாத் (137)

குண்டப்பா விஸ்வநாத் 1969 ஆம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் 137 ரன்கள் அடித்து அசத்தினார்.

Debut Test Match Century:  அறிமுக டெஸ்ட்டில் சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா? முழு ரிப்போர்ட் இதோ..!

5.பிரித்வி ஷா (134)

பிரித்வி ஷா 2018 ஆம் ஆண்டு ராஜ்கோடில் உள்ள மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில்  134 ரன்கள் குவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ
Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
"யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vignesh Mother | ’’ஒழுங்கா TREATMENT பாக்கலடாக்டர் தரக்குறைவா நடத்துனாரு’’விக்னேஷின் தாய் கதறல்Khalistani Terrorist attack Ram Temple | ”ராமர் கோயிலை இடிப்போம்”தேதி குறித்த தீவிரவாதிகள்Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ
Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
"யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!
Breaking News LIVE: வெள்ளக்காடான வெள்ளம்! 21 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
Breaking News LIVE: வெள்ளக்காடான வெள்ளம்! 21 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Stock market crash:தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை- என்ன காரணம்?முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!
Stock market crash:தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை- என்ன காரணம்?முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!
Embed widget