Asia Cup 2025: அப்படி வாங்க வழிக்கு! கைகுலுக்கல் சர்ச்சை! பின்வாங்கிய பாகிஸ்தான்.. UAE-வுடன் விளையாட தயார்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் கலந்துரையாடியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த திருப்பம் ஏற்பட்டது.

ஆசியக் கோப்பையிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலிருந்து அதிலிருந்து பின்வாங்கியுள்ளது, இன்று துபாயில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான தங்கள் அணி விளையாடும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் கலந்துரையாடியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த திருப்பம் ஏற்பட்டது. ஞாயிறன்று இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தபோது வெடித்த "கைகுலுக்கல் பஞ்சாயத்தால் பாகிஸ்தான் அணி விளையாடுமா என்கிற சந்தேகம் எழுந்தது.
போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் மேல்முறையீட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்த போதிலும், இன்றைய ஆட்டத்தில் அவர் போட்டி நடுவராக இருக்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ஐசிசியால் நியமிக்கப்பட்ட ரிச்சி ரிச்சர்ட்சன் போட்டியை மேற்பார்வையிடுவார்.
வழிக்கு வந்த பாகிஸ்தான்
ஞாயிற்றுக்கிழமை போட்டிக்குப் பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் உட்பட பல இந்திய வீரர்கள் பாக் அணியுடன் கைகுலுக்க மறுத்தபோது, பைக்ராஃப்ட் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டி, பைக்ராஃப்ட் தொடர்ந்து போட்டி நடுவராக ஈடுபட்டால் போட்டியில் இருந்து விலக நேரிடும் என்று பாகிஸ்தான் முன்னதாக எச்சரித்திருந்தது.
பாகிஸ்தான் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்தபோது நிச்சயமற்ற தன்மை மேலும் அதிகரித்தது, இதனால் பாகிஸ்தான் அணி இப்போட்டியை புறக்கணிக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது எழுந்தன. இருப்பினும், சல்மான் அலி ஆகா தலைமையிலான அணி, வழக்கம் போல் தயாராகி வருவதைக் குறிக்கும் வகையில், அன்றைய தினம் பிற்பகுதியில் ஐசிசி அகாடமியில் பயிற்சி பெற்றது.
பாகிஸ்தான் அணி விலகினால், அந்த அணி சூப்பர் 4 சுற்றில் இடம் பெற முடியாமல் போய்விடும். இந்தியாவிடம் படுதோல்வியடைந்த பிறகு, தங்கள் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக ஒரு வெற்றி மட்டுமே தேவை.
ஹேண்ட்ஷேக் ஸ்னப்பில் இருந்து வந்த விளைவு
போட்டிக்குப் பிந்தைய கைகுலுக்கும் மரபை இந்தியா கடைப்பிடிக்க மறுத்ததால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பரிசளிப்பு விழாவைத தவிர்த்தார், அதே நேரத்தில் பயிற்சியாளர் மைக் ஹெசன் அணியின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
"வாழ்க்கையில் சில விஷயங்கள் விளையாட்டு வீரர்களின் மனப்பான்மைக்கு அப்பாற்பட்டவை" என்று கூறி தனது நிலைப்பாட்டை ஆதரித்தார் சூர்யகுமார் யாதவ். டாஸ் போடும் போதும், இந்தியாவின் 128 ரன்கள் வெற்றி இலக்கை அடைந்த பிறகும் கைகுலுக்குவதைத் தவிர்த்துவிட்டு, சக வீரர் சிவம் துபேவுடன் நேராக டிரஸ்ஸிங் அறைக்கு நடந்து சென்றார். அவர்களுக்குப் பின்னால் ஒரு இந்திய அதிகாரி கதவை மூடுவது தெரிந்தது.
இந்திய கேப்டன் இந்த வெற்றியை இந்திய ராணுவத்திற்கும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உயிரிழந்தவர்களுக்காக அர்ப்பணித்தார்.
வன்மத்தை கக்கிய பாக் முன்னாள் வீரர்கள்
இந்த சர்ச்சை இணையத்திலும் தொலைக்காட்சியிலும் சூடான விவாதங்களைத் தூண்டியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் ஒரு தொலைக்காட்சி நேரலையில் நிகழ்ச்சியின் போது சூர்யகுமாரை அவமதிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தினார், பின்னர் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு ஒரு விசித்திரமான விளக்கத்தை அளித்தார். உலகக் கோப்பை வென்ற பந்து வீச்சாளர் மதன் லால் யூசுப்பின் கருத்தைக் கண்டித்து, அது பாகிஸ்தானின் கிரிக்கெட் சகோதரத்துவத்தின் மோசமான பிரதிபலிப்பு என்று கூறினார்.





















