ODI World Cup 2023: கங்குலி போட்ட பக்கா ப்ளான்.. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவங்க இருந்தா கோப்பை நமக்குத்தான்..!
ODI World Cup 2023: இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி நவம்பர் மாதம் 19-ஆம் தேதிவரை இந்தியாவில் நடைபெறுகிறது.
![ODI World Cup 2023: கங்குலி போட்ட பக்கா ப்ளான்.. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவங்க இருந்தா கோப்பை நமக்குத்தான்..! ODI World Cup 2023 Sourav Ganguly Named 15 Member Team India Squad CWC 2023 ODI World Cup 2023: கங்குலி போட்ட பக்கா ப்ளான்.. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவங்க இருந்தா கோப்பை நமக்குத்தான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/09/c184557af9219c57797aaeeeb3e6b69c1688891479371689_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் இருந்தாலும் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தயாராவதை விட போட்டிகளைக் காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில் ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு முதல் ஐசிசி மற்றும் பிசிசிஐ என இரண்டு கிரிக்கெட் வாரியமும் மாறி மாறி அப்டேட்டுகளை விட்டுக்கொண்டு ரசிகர்களை உலகக்கோப்பை தொடர் குறித்து முணுமுணுக்க வைத்துக்கொண்டே உள்ளனர்.
ஏற்கனவே ஐசிசி உலகக்கோப்பையை விண்வெளியில் அறிமுகம் செய்தது, இதையடுத்து பிசிசிஐ இம்முறை உலகக்கோப்பை போட்டிகள் நடத்தத்திட்டமிட்டுள்ள 12 மைதானங்களுக்கும் தலா 50 கோடி ரூபாய் மேம்பாட்டு செலவிற்காக ஒதுக்கியது. இதற்கான பணிகள் 12 மைதானங்களிலும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு உள்ளது. இதனால் ஐபிஎல் தொடருக்குப் பின்னர் தொடங்கி ஆசிய கோப்பை முடியும் வரை அதாவது உலககோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடரும் வரை இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட்டுகள் நடத்துவதை பிசிசிஐ தவிர்த்தது. மேலும், உள்ளூர் போட்டிகளை மற்ற மைதானங்களில் நடத்தவும் பரிந்துரைத்தது. உலகக் கோப்பை தொடருக்கு இம்முறை மொத்தம் 10 நாடுகள் களமிறங்குகின்றன.
ஐசிசி தரப்பில் உலககோப்பை தொடரை கிரிக்கெட் இன்னும் பிரபலமாகாத மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் இந்த தொடரில் ரசிகர்களாக இணைக்க வேண்டும் என்ற நோக்குடனும் மேலும், அந்த நாடுகளையும் கிரிக்கெட் விளையாடத் தூண்டவேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய அணி இம்முறை கோப்பையை வென்று மூன்றாவது முறையாக உலகக்கோப்பையில் தனது பெயரை பதிவு செய்யவேண்டும் என இந்திய கிரிக்கெட அணியின் முன்னாள் வீரர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு உள்ளனர்.
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பிசிசிஐ-இன் முன்னாள் தலைவருமான கங்குலி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலககோப்பைக்கான உத்தேச அணியை தனது கணிப்பில் இருந்து வெளியிட்டுள்ளார். அதில் ஐந்து பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர்கள், இரண்டு மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள், இரண்டு சுழற்பந்து ஆல்ரவுண்டர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படாத யுஸ்வேந்திர சஹாலுக்கு கங்குலியின் கனவு அணியிலும் இடம் கொடுக்கப்படவில்லை.
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், அக்ஷார் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)