ODI World Cup 2023: ’இந்த ஆண்டு பிறந்த கேப்டனே கோப்பையை தூக்குவார்’.. கணித்த பிரபல விஞ்ஞான ஜோதிடர்!
1987ம் ஆண்டு பிறந்த கேப்டனே இந்தியாவில் நடக்கவிருக்கும் ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வார் என்று விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.
2011 ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவில் இன்று முதல் தொடங்க இருக்கிறது. இன்று தொடங்கும் லீக் போட்டிகள் 10 ஸ்டேடியங்களில் 48 போட்டிகளாக நடத்தப்பட்டு வருகின்ற நவம்பர் 19ம் தேதி முடிவடைகிறது.
இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை நடத்தப்படுவது இது 4வது முறையாகும். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், 2011 ம் ஆண்டு சொந்த மண்ணில் ஆடிய இந்தியா அணி கோப்பையை வென்றது.
அதேபோல், 2015ம் ஆண்டு தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவும், 2019 ம் ஆண்டு தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியும் கோப்பையும் வென்றது. இந்த சூழலில் இந்தாண்டு இந்திய அணியும் ரோஹித் சர்மா தலைமையில் கோப்பையை தட்டித்தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Famous astrologer Greenstone Lobo has predicted that India will win World Cup 2023 🏆🇮🇳
— Sportskeeda (@Sportskeeda) October 2, 2023
He says India have the best captain in Rohit Sharma and his story is following the same pattern to that of Lionel Messi.
Greenstone Lobo, previously, predicted correctly the winners of… pic.twitter.com/hm9DtstNDZ
இந்தநிலையில் இந்தாண்டு யார் கோப்பையை வெல்வார்கள் என்பதை விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோ லோபோ கணித்துள்ளார். முன்னதாக, இவர் கடந்த 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை யார் வெல்வார்கள் என்று கணித்தார். அவர் கணித்த அனைத்தும் இதுவரை உண்மையாகவே இருந்தது.
சமீபத்தில், கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை 1987ம் ஆண்டு பிறந்த கேப்டனே வெல்வார் என்று விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோ லோபோ கணித்தார். அதேபோல், 1987ம் ஆண்டு பிறந்த லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியே கோப்பையை வென்றது. இதற்கு முன்பி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் 1986ம் ஆண்டு பிறந்த கேப்டனே கோப்பையை வெல்வார் என்று கணித்தார். இவர் கணித்தது போலவே 1986ல் பிறந்த இயான் மோட்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியே கோப்பை வென்றது.
இன்று உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்கவுள்ள நிலையில், 1987ம் ஆண்டு பிறந்த கேப்டனே கோப்பையை வெல்வார் என்று விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோ லோபோ கணித்துள்ளார். இப்படியான சூழலில் தற்போது உலகக்கோப்பையை வழிநடத்தும் கேப்டன்களில் ஷகிப் அல் ஹாசன் மார்ச் 24, 1987 இல் பிறந்தவர். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஏப்ரல் 30, 1987 இல் பிறந்தவர். இரண்டு அணிகளில் பலத்தை பார்க்கும்போது இந்தியாவே கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, டென்னிஸில் 1986ல் பிறந்தவர்களின் சாதனையை 1987ல் பிறந்தவர் முறியடிப்பார் என லோபோ தெரிவித்திருந்தார். அதன்படி, 1986ல் பிறந்த நடாலின் சாதனையை 1987ல் பிறந்த ஜோகோவிச் முறியடித்து சாதனை படைத்தார்.
இந்திய அணி விளையாடும் போட்டிகள்:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதையடுத்து, இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து களமிறங்குகிறது. இரு அணிகளும் அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த அணிகளைத் தவிர இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து போன்ற அணிகளுடன் இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.