CWC 2023 Reschedule: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: தேதிகளில் மாற்றம்: எங்கு எப்போது தெரியுமா?
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
”இந்த ஆண்டு ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட போட்டி வேறு ஒரு நாளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற எட்டு போட்டிகளின் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முதலில் அக்டோபர் 15, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் இது ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டு இப்போது அக்டோபர் 14 சனிக்கிழமை அன்று அதே இடத்தில் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்தின் போட்டி அக்டோபர் 14 சனிக்கிழமையிலிருந்து மாற்றப்பட்டுள்ளது. அதாவது, இந்த போட்டி அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும். ஹைதராபாத்தில் இலங்கைக்கு எதிரான பாகிஸ்தானின் போட்டி அக்டோபர் 12 ஆம் தேதியில் இருந்து இப்போது அக்டோபர் 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் லக்னோவில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியா அணி களமிறங்கும் போட்டி அக்டோபர் 12 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பங்களாதேஷுக்கு எதிரான நியூசிலாந்தின் ஆட்டம் முதலில் சென்னையில் அக்டோபர் 14 ஆம் தேதி பகல் ஆட்டமாகத் திட்டமிடப்பட்டது, இப்போது அக்டோபர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு பகல்-இரவு போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அட்டவணை
போட்டி எண் | தேதி | நாள் | அணி 1 | அணி 2 | இடம் | நகரம் | நேரம் |
---|---|---|---|---|---|---|---|
5 | அக்டோபர் 8 | ஞாயிற்றுக்கிழமை | இந்தியா | ஆஸ்திரேலியா | எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் | சென்னை | பிற்பகல் 2:00 |
8 | அக்டோபர் 11 | புதன் | இந்தியா | ஆப்கானிஸ்தான் | அருண் ஜெட்லி மைதானம் | டெல்லி | பிற்பகல் 2:00 |
13 | அக்டோபர் 14 | சனிக்கிழமை | இந்தியா | பாகிஸ்தான் | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் | பிற்பகல் 2:00 |
17 | அக்டோபர் 19 | வியாழன் | இந்தியா | பங்களாதேஷ் | MCA ஸ்டேடியம் | புனே | பிற்பகல் 2:00 |
21 | அக்டோபர் 22 | ஞாயிற்றுக்கிழமை | இந்தியா | நியூசிலாந்து | HPCA ஸ்டேடியம் | தர்மசாலா | பிற்பகல் 2:00 |
29 | அக்டோபர் 29 | ஞாயிற்றுக்கிழமை | இந்தியா | இங்கிலாந்து | ஏகானா ஸ்டேடியம் | லக்னோ | பிற்பகல் 2:00 |
33 | நவம்பர் 2 | வியாழன் | இந்தியா | இலங்கை | வான்கடே மைதானம் | மும்பை | பிற்பகல் 2:00 |
37 | நவம்பர் 5 | ஞாயிற்றுக்கிழமை | இந்தியா | தென்னாப்பிரிக்கா | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா | பிற்பகல் 2:00 |
43 | நவம்பர் 12 | ஞாயிற்றுக்கிழமை | இந்தியா | தகுதி 1 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை குறித்து ஐசிசி மற்றும் பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படவுள்ளது.
அதாவது, இம்முறை டிக்கெட் வாங்கும் முன் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது டிக்கெட்டுகள் வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அதன்படி ஆன்லைன் டிக்கெட் பதிவு ஆகஸ்ட் 15 முதல் தொடங்குகிறது. ஆகஸ்ட் 25 முதல் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்பவர்கள் https://www.cricketworldcup.com/register என்ற வலைதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். ஒருநபர் எவ்வளவு டிக்கெட்டுகள் பதிவு செய்துகொள்ளலாம் என்பது குறித்து எந்த அறிவிப்பும் அதில் தெரிவிக்கப்படவில்லை.
இந்தியாவைத் தவிர அனைத்து அணிகளின் பயிற்சி மற்றும் உலகக்கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 25ஆம் தேதி விற்பனை செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியாவின் பயிற்சிப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.