IND vs NZ Semi-Final: பேட்டிங் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்த ரோஹித்.. நியூசிலாந்திடம் எடுபடுமா பேட்டிங் வியூகம்..!
உலகக் கோப்பை 2023 நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
2023 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இன்று இரு அணிகளிலும் எந்த மாற்றமும் இல்லை.
டாஸ் வென்ற ரோஹித் சர்மா, 'முதலில் பேட்டிங் செய்வோம். ஆடுகளம் நன்றாக உள்ளது. கொஞ்சம் மெதுவாகத் தெரிகிறது. நியூசிலாந்து தொடர்ந்து சிறப்பாக செயல்படும் அணி. இன்று எங்களுக்கு ஒரு பெரிய நாள். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், 'நாங்களும் இங்கு முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். முதலில் பந்துவீச்சில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸிலும் பனியை எதிர்பார்ப்போம். இது ஒரு சிறந்த வாய்ப்பு. நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைதான் ஆனால் இடம் வேறு. கடந்த போட்டியின் அதே ப்ளேயிங்-11 உடன் நாங்கள் செல்கிறோம்.
With #TeamIndia remaining unbeaten in #CWC23, will they settle the score and avenge the losses against #NewZealand in the 2019 ICC CWC semifinal and the ICC WTC final?
— Star Sports (@StarSportsIndia) November 15, 2023
Here are the playing XIs!
Tune-in to Semi-Final 1 #INDvNZ in #WorldCupOnStar, LIVE NOW on Star Sports Network pic.twitter.com/syOzf7uWS7
இந்திய அணியின் ப்ளேயிங் 11: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.
நியூசிலாந்து அணியின் ப்ளேயிங்11: டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்.
இன்றைய ஆடுகளம் எப்படி இருக்கும்..?
வான்கடே ஆடுகளத்தின் தன்மை இங்கு நடைபெற்ற கடந்த நான்கு உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து சற்று வித்தியாசமானதாக காணப்படுகிறது. இன்று ஆடுகளம் மெதுவாக இருக்கும் என தெரிகிறது. பிட்சுக்கு அருகில் உள்ள ஆடுகளத்தில் புல் குறைவாக உள்ளது. அதாவது இங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக செயல்படும் என்று எதிர்பார்க்கலாம். முதலில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில், பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சற்று போராட வேண்டியிருக்கும். இதன் பிறகு ரன் சேஸ் எளிதாக இருக்கும். பனி விழுந்தால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் எளிதாக இருக்கும்.