ODI WC AUS vs ENG: லபுஷேனே, ஸ்மித் சிறப்பான பேட்டிங்! 287 ரன்களை எட்டி வெற்றி பெறுமா இங்கிலாந்து?
ODI WC 2023 AUS vs ENG: உலகக் கோப்பையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஆஸ்திரேலிய அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் 36வது லீக் போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
லபுஷேனே அபாரம்:
இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. டிராவிஸ் ஹெட் 11 ரன்களில் அவுட்டாக, டேவிட் வார்னர் 15 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்மித் – லபுஷேனே இருவரும் நிதானமாக ஆடினர். இதனால், ஆஸ்திரேலியாவின் ரன் நகர்ந்தது. அணியின் ஸகோர் 113 ரன்களை எட்டியபோது சிறப்பாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் அவுட்டானார். அவர் 52 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலீஷ் 3 ரன்களில் அவுட்டானார். கேமரூன் கிரீனுடன் ஜோடி சேர்ந்த லபுஷேனே மறுமுனையில் அபாரமாக ஆடி அரைசதம் விளாசினார். சிறப்பாக ஆடிய லபுஷேனே சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவுட்டானார். அவர் 83 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
வெற்றி பெறுமா இங்கிலாந்து?
பின்னர், கிரீன் – ஸ்டோய்னிஸ் ஜோடி சிறப்பாக ஆடியது. நன்றாக ஆடிக் கொண்டிருந்த கிரீன் 52 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்ட ஸ்டோய்னிஸ் 32 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
கடைசியில் ஆஸ்திரேலிய அணி 48.3 ஓவர்கள் முடிவில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகும். ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட இங்கிலாந்து அணி இந்த போட்டியில் தோற்றால் தொடரை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிடுவார்கள்.
மேலும் படிக்க: NZ vs PAK Innings Highlights: பொளந்து கட்டிய ரவீந்திரா - வில்லியம்சன்.. பிலிப்ஸ் அதிரடி - பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு
மேலும் படிக்க: World Cup 2023: இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பந்தா..? முன்னாள் பாகிஸ்தான் வீரரின் கருத்தால் சர்ச்சை!