Vice Captain in Tests: அட அஸ்வின், புஜாராவை விடுங்க.. இவரை வைஸ் கேப்டனாக போடுங்க.. ஹர்பஜன் சொன்னது யாரை?
XI இல் விளையாடும் ஒருவர்தான் துணை கேப்டனாக இருக்க வேண்டும். இந்திய அல்லது வெளிநாட்டு நிலைமைகளை மீறி அவர் அணியில் எப்போதும் இடம்பெற வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வீரர்தான் அவர் என்று நான் நினைக்கிறேன்.
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த வைஸ் கேப்டன் யார் என்ற கேள்வி பெரிய விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில் முன்னாள் இந்திய அணி சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அதுகுறித்து தனது வித்தியாசமான பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.
கேஎல் ராகுலின் மோசமான ஃபார்ம்
கே.எல்.ராகுலை வைஸ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய பின், இந்திய டெஸ்ட் அணி புதிய வைஸ் கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பிசிசிஐ மற்றும் தேர்வர்கள் அதனை கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கைகளில் வழங்க முடிவு செய்தனர்.டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுலின் மோசமான ஃபார்ம், அவரை துணை கேப்டன் பதவியில் இருந்தும், அணியில் அவரது இடத்தில் இருந்தும் இறக்கியுள்ளது. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளை வாரியம் அறிவித்ததிலிருந்து, அடுத்த துணை கேப்டன் யார் என்ற விவாதம் தீப்பிடித்துள்ளது. மேலும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அதுகுறித்த கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின் மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் தங்களது அனுபவம் மற்றும் டெஸ்ட் அணியில் உறுதியான இடத்தைக் கருத்தில் கொண்டு ரோஹித்தின் துணை கேப்டன் ஆவதற்கு முன்னோடிகளாக உள்ளனர்.
ஹர்பஜன் சிங்-கின் மாற்றுக்கருத்து
ஆனால், முன்னாள் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் பலர் கூறும் இந்த கருத்தில் இருந்து வேறுபட்டு, இன்-ஃபார்ம் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அந்த பாத்திரம் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறார். ஜடேஜாவின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆடும் லெவனில் இடம் உறுதியாகிவிட்டதால், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளிலும் ரோஹித்தின் துணை கேப்டனாக இருக்க வேண்டும் என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார்.
ஜடேஜா ஏன் துணை கேப்டன் ஆகவேண்டும்?
ஹர்பஜன் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "அவரது ஆட்டத்தை நீங்கள் பார்த்தால், அவரது பேட்டிங் நன்றாக உள்ளது. அவர் டெஸ்டில் மட்டுமல்ல, ஒருநாள் போட்டிகளிலும் துணை கேப்டன் பதவியைப் பெற வேண்டும். இதைவிட சிறந்த வழி இருப்பதாக நான் நினைக்கவில்லை. XI இல் விளையாடும் ஒருவர்தான் துணை கேப்டனாக இருக்க வேண்டும். இந்திய அல்லது வெளிநாட்டு நிலைமைகளை மீறி அவர் அணியில் எப்போதும் இடம்பெற வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வீரர் ரவீந்திர ஜடேஜா என்று நான் நினைக்கிறேன். அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்க வேண்டும். அவர் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு வருகிறார் மற்றும் மூத்த வீரராக அணியின் ஒரு பகுதியாக உள்ளார்," என்று அவர் மேலும் கூறினார்.
உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்
ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் போன்றவர்களுக்குப் பிறகு 2020 முதல் இந்திய பேட்டருக்கான டெஸ்டில் நான்காவது அதிகபட்ச சராசரி (40.78) ஜடேஜாவுக்கு உள்ளது. ஜடேஜா ஏற்கனவே இரண்டு டெஸ்டில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி நாக்பூர் மற்றும் டெல்லியில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை துவம்சம் செய்தார். பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒருவரின் லீக்கில் ஜடேஜாவும் உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் என்று ஹர்பஜன் கூறினார். "அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது, பேட் மற்றும் பந்து இரண்டிலும் அவரது ஃபார்ம் மிகவும் நல்லது. உலக கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட சிறந்த ஆல்ரவுண்டர் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். ஆம், பென் ஸ்டோக்ஸ் அதே லீக்கில் இருக்கும் ஒரு வீரர்" என்று அவர் மேலும் கூறினார்.