ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகும் தகுதி உள்ள இந்திய வீரர்? ஹைடன் கைகாட்டியது யாரை தெரியுமா?
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஆகக் கூடிய தகுதி எம்.எஸ்.தோனிக்கு இருக்கிறது என்று அந்த அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2024:
கிரிக்கெட் உலகத்தை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி தான் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. இப்போது கூட ஒரு நாள் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஆகியவற்றை ஆஸ்திரேலிய அணிதான் வைத்திருக்கிறது. அதேபோல் டி20 உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் தான் மற்ற இந்திய வீரர்களை காட்டிலும் எம்.எஸ்.தோனிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆகக் கூடிய தகுதி இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே அணிக்காக விளையாடியவருமான மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக தோனியால் முடியும்:
இது தொடர்பாக பேசியுள்ள அவர், “ஆஸ்திரேலிய உடை மாற்றும் அறையில் தோனி எளிதாக உட்கார்ந்து அதை கேப்டன்ஷிப் செய்ய முடியும். ஏனெனில் அவர் யாரையும் விட பெரியவர் அல்ல என்று நம்புகிறார். அவர் மிகவும் எளிமையானவர். அவர் அணியில் கடினமாக உழைக்கிறார். எம்.எஸ்.தோனி எப்போதும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.
தாம் எந்தளவுக்கு மகத்தானவன் அல்லது தாம் என்ன சாதித்தேன் என்பதை தோனி மற்றவர்களிடம் சொல்லி நீங்கள் பார்த்திருக்க முடியாது. அதனாலேயே எம்.எஸ். தோனி துருப்புச்சீட்டாக இருக்கிறார். நீங்கள் ஆஸ்திரேலியாவையும் 25 மில்லியன் மக்களையும் பாருங்கள். அவர்கள் எப்படி எங்களுக்கு எதிராக வென்றார்கள்? என்று கேட்பீர்கள்.
நட்சத்திர கேப்டன்:
எம்.எஸ்.தோனி அனைத்து வீரர்களையும் ஒன்றிணைக்க ஒரு வழியை கண்டுபிடித்து வைத்துள்ளார். சுய விளம்பரத்திற்காக அல்லாமல் ஈகோவை பற்றி எதுவும் இல்லாத வகையில் அவர் அதை செய்கிறார். சிறிய கிராமத்திலிருந்து வந்த அவர் இந்திய மக்கள் குறிப்பாக சென்னை மக்களின் இதயங்களில் இடம் பிடிக்கும் வழியை கண்டறிந்துள்ளார்.
எப்போதும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர கேப்டனாக தல இருப்பார். ஆனால் நாம் அனைவரும் சொல்வது போல் தோனி தம்மைப் பற்றி எப்போதும் சொல்ல மாட்டார். அது தான் அவருடைய அழகாகும். அவர் எப்போதும் அணியை முன்னிலைப்படுத்துவதை அனைவரும் விரும்புகின்றனர்” என்று கூறியுள்ளார் மேத்யூ ஹைடன்.
மேலும் படிக்க: Sunil Chhetri Last Match: கடைசி போட்டியில் களம் இறங்கும் கால்பந்து சிங்கம் சுனில் சேத்ரி! வெற்றிக் கனியை பறிக்குமா இந்திய அணி?
மேலும் படிக்க: T20 World Cup 2024: நோ பால் சம்பவம்.. ஸ்காட்லாந்துக்கு எதிராக திணறிய இங்கிலாந்து! பீதியடைந்ததாக ஒப்புக்கொண்ட மார்க் வுட்!