Mithali Raj Retirement: அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - மிதாலிராஜ் அறிவிப்பு
அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலிராஜ் அறிவித்துள்ளார்.

ஓய்வு பெறுவதாக அறிவிப்பு:
மகளிர் கிரிக்கெட் அணியில் ஜாம்பவனாக விளங்கிய இந்திய வீராங்கனை மிதாலி ராஜ், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தனது தெரிவித்துள்ளார்.
பெருமிதம்:
அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடியது மிக பெருமையாக உள்ளது. எனது கிரிக்கெட் பயணத்தில் மேடுகளும் பள்ளங்களும் இருந்தன. ஒவ்வொரு போட்டியும் எனக்கு புதுமையானவற்றை கற்றுத் தந்தன. இந்த 23 ஆண்டுகள் திருப்திகரமானதாகவும், சவாலனதாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்தன.
இளம் வீரர்களிடம் ஒப்படைக்கிறேன்.
களத்தில் விளையாடும் போது , ஒவ்வொரு போட்டியிலும் எனது சிறப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்தியாவுக்கு விளையாடுவதில் கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டேன். இந்த தருணத்தில் இளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிறேன். வரும் காலங்களில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மிகச் சிறப்பாக இருக்கும்.
கவுரவம்
பல ஆண்டுகளாக , இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்தியது, எனக்கு கவுரவமாக உள்ளது. இது தனிப்பட்ட வகையில் என்னை மிகவும் மேம்படுத்தியுள்ளது.
நன்றி:
இத்தனை ஆண்டுகள் எனக்கு அன்பும் ஆதரவும் அளித்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி. மேலும் பிசிசிஐ மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் சாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என டுவிட்டர் பக்கத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்
Thank you for all your love & support over the years!
— Mithali Raj (@M_Raj03) June 8, 2022
I look forward to my 2nd innings with your blessing and support. pic.twitter.com/OkPUICcU4u
Also Read: IND vs SA: நாளை முதல் டி20 போட்டி... இதுதான் பிட்ச்: எப்படி இருக்க போகுது மேட்ச்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

