மேலும் அறிய

‛என்னை யாரும் தேடாதீங்க...’ சியர்ஸ்... சொல்லி புறப்பட்ட மேக்ஸ்வெல்!

மேக்ஸ்வெல் மட்டுமல்லாது  ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணி வீரர்களும், இந்த வெற்றியை கொண்டாடித் தீர்க்க முடிவு செய்து, பார்ட்டி மூடிற்கு சென்றுவிட்டதாகவே தெரிகிறது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. சமீபமாக மோசமான ஃபார்மில் இருந்த அந்த அணி, திடீர் விஸ்வரூபம் எடுத்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. 

முதலில் பேட் செய்த நியூசிலாந்து சிறப்பாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்குடன் கலமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, கடைசி 7 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், ஆஸ்திரேலிய அணி ஐசிசி டி20 யின் முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


‛என்னை யாரும் தேடாதீங்க...’ சியர்ஸ்... சொல்லி புறப்பட்ட மேக்ஸ்வெல்!

கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடித்தந்த வகையில் 77 ரன்கள் எடுத்த மிட்சல் மார்ஸ் மற்றும் அதிரடி காட்டி 18 பந்தில் 28 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் ஆகியோர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

பங்களாதேஷ் உள்ளிட்ட கத்துக்குட்டி அணிகளிடம் தொடர் தோல்விகளை தழுவிய ஆஸ்திரேலியா, தனது பழைய ஃபார்மிற்கு திரும்பியிருப்பதால், ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாடி தீர்க்கின்றனர். இது ஒருபுறமிருக்க, ஆஸ்திரேலிய வீரர்களே இந்த வெற்றியை நம்ப முடியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

அணியை வெற்றி பெறச் செய்தவர்களில் ஒருவரான கிலான் மேக்ஸ்வெல், ‛அடுத்த சில நாட்களுக்கு தான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கப் போவதாகவும்... சியர்ஸ்...’ என்றும், தன் மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த கால கசப்பான அனுபவங்களை குடித்து தீர்க்க அவர் முடிவு செய்துவிட்டார், என பலரும் அவரது பதிவில் பதில் பதிவு போட்டு, அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 

 

மேக்ஸ்வெல் மட்டுமல்லாது  ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணி வீரர்களும், இந்த வெற்றியை கொண்டாடித் தீர்க்க முடிவு செய்து, பார்ட்டி மூடிற்கு சென்றுவிட்டதாகவே தெரிகிறது. நீண்ட... இடைவெளிக்குப் பின் கிடைத்த வெற்றியல்லவா... கொண்டாடத் தானே தோன்றும்! 

‛அவரை என்னனு நெனச்சீங்க...’ வார்னருக்காக வரிந்து கட்டி களமிறங்கிய மனைவி!

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget