மேலும் அறிய

KL Rahul Covid Positive: கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

KL Rahul Covid Positive: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் உடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவிருந்த நிலையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

KL Rahul Covid Positive: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் உடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவிருந்த நிலையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனை பிசிசிஐயுன் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்திய அணி துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் அவ்வபோது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். குறிப்பாக  இந்தாண்டில் மட்டும் மூன்று முறை காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.
குறிப்பாக, இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த போதும்  கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகினார். இவர் அடிக்கடி காயம் காரணமாக விலகுவதால், முழு பிட்னஸுக்காக  பிசிசிஐ சார்பாக ஜெர்மனிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து  தந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவர், “கடந்த 2 வாரங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. தற்போது காயம் குணமாகி உடல்நிலை மேம்பட்டு வருகிறது. முழு உடற்தகுதியை மீட்கும் பயணத்தை இன்று முதல் துவங்கியுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிகள்” எனத் தெரிவித்திருந்தார். 

இங்கிலாந்து தொடரினை மிஸ் செய்த ராகுல், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற உடற் தகுதித் தேர்வில் கலந்து கொண்ட கே.எல். ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதனால் இந்த தொடர் முழுவதும் இவர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இது கே.எல். ராகுலுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் எப்போதும் கலக்கி வரும் கே.எல். ராகுலுக்கு காயம் மற்றும் தொற்று பாதிப்பு பெரும் மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது. இவர் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் 7 சதம், 13 அரை சதம் உட்பட 2,457 ரன்களும், 42 ஒருநாள் போட்டிகளில் ஐந்து சதம் உட்பட 1,634 ரன்களும் அடித்துள்ளார். 56 சர்வதேச டி-20 போட்டிகளில் இரண்டு சதம் உட்பட 1,831 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget