KKR Captain: ஐ.பி.எல்.2024... புதிய கேப்டனை அறிவித்தது கொல்கத்தா அணி! விவரம் உள்ளே!
KKR Captain Shreyas Iyer: கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் துணை கேப்டனாக நிதிஷ் ராணா அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஐபிஎல் தொடரில் காயத்தினால் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆட முடியாமல் போனதால் இடது கை அனுபவ அதிரடி வீரர் நிதிஷ் ராணா கொல்கத்தா கேப்டன்சி பொறுப்பை ஏற்றார்.
அவரது தலைமையிலான கொல்கத்தா அணி 2023 ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியது. அணி 6 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகள் என புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்தது.
முன்னதாக, கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயஸ் ஐயர் இந்த நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து வெளியேறினார். அதனையடுத்து, இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
புதிய கேப்டன்:
இதில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், தான், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா அணிக்கு திரும்பும் அவர் மீண்டும் கேப்டனாகவும் அந்த நிர்வாகத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல்,அந்த அணியின் துணை கேப்டான நிதிஷ் ராணா செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளது கொல்கத்தா அணி.
Quick Update 👇#IPL2024 @VenkyMysore @ShreyasIyer15 @NitishRana_27 pic.twitter.com/JRBJ5aEHRO
— KolkataKnightRiders (@KKRiders) December 14, 2023
இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியதாவது: ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் அடுத்த சீசனில் அணியை கேப்டனாக வழிநடத்துவார். அணியின் துணைக் கேப்டனாக நிதீஷ் ராணா செயல்படுவார் என்றார்.
Congrats Shreyas and Nitish! Leaders ready for battle! @KKRiders
— Gautam Gambhir (@GautamGambhir) December 14, 2023
அந்த அணியின் ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கெளதம் காம்பீர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரேயஸ் மற்றும் ராணாவிற்கு வாழ்த்துக்கள். போருக்கு தயாரான தலைவர்கள்” என்று கூறியுள்ளார்.
கேகேஆர் தக்க வைத்துள்ள வீரர்கள்:
நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஸ்ரேயஸ் ஐயர், ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.
கேகேஆர் விடுவித்த வீரர்கள்:
ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட் வீஸே, ஷர்துல் தாக்கூர், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஜான்சன் சார்லஸ்.