வந்துட்டான்… வந்துட்டான்… வந்துட்டான்… மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… ஃபார்முக்கு திரும்பிய வீரர்!
கடந்த வருடம் காயத்தில் இருக்கிறார் ஐபிஎல் விளையாட கிடைக்கமாட்டார் என்று தெரிந்தும் ரூ.8 கோடியை விட்டுக்கொடுத்து இந்த வீரரை இந்த வருட ஐபிஎல்-காக சேமித்து வைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஃபார்முக்கு திரும்பிய மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
காயத்தில் இருந்து மீண்ட வீரர்
கடந்த வருடம் காயத்தில் இருக்கிறார் ஐபிஎல் விளையாட கிடைக்கமாட்டார் என்று தெரிந்தும் ரூ.8 கோடியை விட்டுக்கொடுத்து இந்த வீரரை இந்த வருட ஐபிஎல்லுக்காக சேமித்து வைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. விளையாடப்போகாத வீரர் என்று தெரிந்தும் அந்த வருடத்தில் 8 கோடி கொடுத்து பாக்கெட்டில் போட்டு வைக்கிறதென்றால் அவர் யார் என்று தெரிந்திருக்கும். மும்பை அணிக்கு கடந்த வருட ஐபிஎல் சிறப்பாக இல்லை, கடைசி இடத்தை பிடித்து மிகவும் மோசமாக வெளியேறியது. ஆனால் இந்த வருடம் மும்பை அணியை எந்த அணியில் சாதாரணமாக எடை போட மாட்டார்கள். அப்படிப்பட்ட வீரர்களுடன் இந்த வருட ஐபிஎல்-இல் களம் இறங்குகிறது மும்பை இந்தியன்ஸ். அதில் முக்கியமான வீரர்தான் ஜோஃப்ரா ஆர்ச்சர். அவரது வேகத்தில் திக்கு திணறும் பேட்ஸ்மேன்களை நாம் பலமுறை பார்த்துள்ளோம். அவரைத்தான் அடைகாத்து வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
It's so good to have you back 😍
— England Cricket (@englandcricket) February 1, 2023
Highlights: https://t.co/dXj70BkbDA
🇿🇦 #SAvENG 🏴 pic.twitter.com/QQn44FCAeF
ஃபார்மை இழந்திருந்த ஆர்ச்சர்
ஒருபக்கம் ஆர்ச்சர், இன்னொரு பக்கம் பும்ரா என மிரட்டும் பவுலிங் அட்டாக்குடன் களமிறங்கும் மும்பை அணியில் இவர்கள் மட்டுமல்ல, சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிக்ரீன், ஜய் ரிச்சர்ட்ஸன் என பெரும் படையையே வைத்துள்ள அணி ரோகித் தலைமையில் களமிறங்க உள்ளது. அதுவும் அணியில் காயத்தில் இருந்த வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தில் இருந்து மீண்டு வர, ஐபிஎல்-க்கு முன் மும்பை அணி முழு பலத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்குதான் ட்விஸ்ட் காத்திருந்தது. தென்னாபிரிக்கா உடனான முதல் ஒருநாள் போட்டியில் இரண்டு வருடங்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்து பந்து வீசிய ஆர்ச்சரை தென்னாபிரிக்க வீரர்கள் துவம்சம் செய்தனர். பத்து ஓவர் வீசி 81 ரன் விட்டுக்கொடுத்து விக்கெட்டும் எடுக்காமல் கடுமையாக சொதப்ப, ஆர்ச்சர் தனது ஃபார்மை இழந்தார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த செய்தி மும்பை அணிக்கும் ரசிகர்களுக்கும் பேரிடியாய் வந்து விழுந்தது. ஆனால் இப்போது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருப்பது உறுதி. தென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று (பிப்ரவரி 1) நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதுடன் வெறும் 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்களை திணரடித்தார். மேலும் அவர் வீசிய 55 பந்துகளில் முப்பது பந்துகள் டாட் பந்துகள் என்பது கூடுதல் செய்தி. இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். 2022 ஆம் ஆண்டில் பெரும்பகுதி ஆடாமல் இருந்த ஆர்ச்சர், காயம் தொடர்பான பிரச்சினைகளுடன் போராடி சிகிச்சைக்காக நேரத்தை செலவிட்டது குறிப்பிடத்தக்கது. அணிக்கு திரும்பிய அவர் தற்போது ஃபார்முக்கும் திரும்பி இருப்பது மும்பை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Genius 💯🦁🏏
— England Cricket (@englandcricket) February 1, 2023
Highlights: https://t.co/dXj70BkbDA
🇿🇦 #SAvENG 🏴 pic.twitter.com/awB1aIu1In
தொடரை வென்றும் பின்னடைவை சந்தித்த தெ.ஆப்ரிக்கா
முதலில் பேட்டிங் செய்து ஜோஸ் பட்லரின் சதத்தால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 346/7 ரன்கள் எடுத்தது. பட்லர் 127 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்தார். அவரோடு கைகோர்த்த டேவிட் மலான் 118 ரன்களை எடுத்தார். தொடர்ந்து விளையாடிய தென்னாபிரிக்கா அணி, ஆர்ச்சரின் 40/6 என்று அதிரடி பந்து வீச்சில் திக்குமுக்காடியது. கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும், அடில் ரஷித் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பந்துவீச்சாளர்கள் கலக்கியதால், 43.1 ஓவர்களில் 287 ரன்களுக்கு தென்னாபிரிக்க அணி கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடி தகுதியை பெறும் தென்னாபிரிக்காவின் வாய்ப்பில் மண்ணை போட்டது. தென்னாபிரிக்கா தொடரை வென்றிருந்தாலும், அவர்கள் 2-1 என்ற கணக்கில் வென்றனர். உலகக் கோப்பையின் பிரதான சுற்றுக்கு நேரடியாகச் செல்ல தென்னாப்பிரிக்கா தொடரை 3-0 என வெல்ல வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.