மேலும் அறிய

INDvsNZ 3RD ODI: மூன்றாவது ஒருநாள் போட்டி..! தொடரை சமன் செய்யுமா இந்தியா? சஞ்சு சாம்சனுக்கு இந்தமுறையும் இடமில்லை..!

INDvsNZ 3RD ODI: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹாஹ்லி ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

INDvsNZ 3RD ODI: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹாஹ்லி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இறுதி ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச முடிவு செய்துள்ளார். 

இதற்கு முன்னதாக, நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் செடன் பார்க்கில்  நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டது. முன்னதாக, இந்த போட்டி அவுட்ஃபீல்ட் ஈரப்பதமாக இருந்த காரணத்தால் டாஸ் போடுவது தாமதம் ஆனது. பின்னர், நான்கு ஓவர்கள் மட்டுமே இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், மீண்டும் ஆட்டம் மழையால் பாதியிலே நிறுத்தப்பட்டது.

பின்னர், சுமார் 4 மணி நேரம் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு தொடங்கியது. 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர்தவான் 3 ரன்களில் அவுட்டாகினார்.

இதையடுத்து, சுப்மன்கில்லுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். வெறும் 29 ஓவர்கள் மட்டுமே ஆட்டம் என்பதால் இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினர். சுப்மன்கில் பவுண்டரிகளாக விளாச, சூர்யகுமார் யாதவ் சிக்ஸர்களாக விளாசினார்.

இருவரும் இணைந்து 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. சுப்மன்கில் 42 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 45 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்ளுடன் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களத்தில் இருந்தனர்.

மழையால் மீண்டும் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் விரக்தியடைந்தனர். மழை விடாமல் பெய்து கொண்டே இருந்ததால் போட்டி நடுவர்கள் இந்த போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர். இதையடுத்து, ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டி எந்த முடிவுமின்றி கைவிடப்பட்டது. இரு அணிகளின் அதிரடியையும் காணலாம் என்று வந்த இரு நாட்டு ரசிகர்களும் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இதனால், இரு அணிகளும் இன்று மோதும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். ஏற்கனவே இந்த தொடரில் நியூசிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சன் இல்லை 

ஏற்கனவே சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் இந்த போட்டியிலும் அவருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை. 

இந்திய அணி அணி; ஷிகர் தவான்(கேப்டன்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கேப்டன் ), டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget