மேலும் அறிய

ODI century on Birthday: பிறந்த நாளில் சதம் அடித்த இந்திய வீரர்கள்... பட்டியல் இதோ!

தங்களது பிறந்த நாள் அன்று சதம் அடித்த இந்திய வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்:

வினோத் காம்ளி:

கடந்த 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது இந்திய அணி. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த இங்கிலாந்து அணி  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவை எதிர்கொண்டது.

முன்னதாக, இந்த தொடரில்  இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 48 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்து. இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற இந்திய அணி வீரர் வினோத் காம்ளி 149 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 100* ரன்கள் எடுத்தார். இது அவரது பிறந்த நாளான ஜனவரி 18 ஆம் தேதி அடிக்கப்பட்ட சதம்.

சச்சின் டெண்டுல்கர்:

கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘கோகோ கோலா கோப்பை‘ போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெடு இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்து  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏப்ரல் 24 ஆம் தேதி 1998 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுகல்கரின் பிறந்த நாள் அன்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்தார். அதன்படி,  மொத்தம் 131 பந்துகள் களத்தில் நின்ற அவர் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் மொத்தம் 134 ரன்கள் குவித்தார்.

விராட் கோலி:

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்கரர் விராட் கோலி கொல்க்கத்தாவில் இன்று (நவம்பர் 5) ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சதம் அடித்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை லீக் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி இந்த போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் 326 ரன்கள் குவித்தது. மேலும், 243 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அதன்படி, மொத்தம் 121 பந்துகளில் 10 பவுண்டரிகள் என மொத்தம் 100* ரன்கள் எடுத்தார். நவம்பர் 5 ஆம் தேதி தன்னுடைய 35-வது பிறந்தநாளன்று கோலி இந்த சதத்தை அடித்துள்ளார்.

மேலும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 49 வது சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம் சச்சின் சாதனையை சமன் செய்தார் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Virat Kohli: 49-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி.. வாழ்த்திய சச்சின்.. என்ன சொன்னாரு தெரியுமா?

மேலும் படிக்க: Virat Kohli: ஒருநாள் போட்டிகளில் 49வது சதத்தை விளாசிய கோலி - சச்சினின் சாதனையை சமன் செய்து அசத்தல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget