அசிங்கப்படுவதற்கு முன்பு ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா.. கட்டம் கட்டி தூக்கினாரா கம்பீர்?
இந்திய அணியில் இருந்து பிசிசிஐ தூக்குவதற்கு முன்பே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழு கடந்த மாதம் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தியது. நேற்று, மும்பையில் இந்த விவகாரம் குறித்தும் விவாதித்திருக்கின்றர்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவரே அறிவித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தங்களின் முடிவை தேர்வுக்குழு பிசிசிஐயிடம் கூறி இருக்கிறது.
அசிங்கப்படுவதற்கு முன்பு ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா:
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அவரை டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தூக்க தேர்வுக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து தானே ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரை இழந்தது. முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கூட ஜஸ்பிரித் பும்ராதான், இந்திய அணிக்கு தலைமை தாங்கினார்.
ஆப்பு வைத்த தேர்வுக்குழு:
தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தால் முதல் போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா, அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆனால், அந்த 3 போட்டியில் 2இல் இந்திய அணி தோல்வியை தழுவியது. கேப்டன்ஸியில் சொதப்பியது மட்டும் இன்றி பேட்டிங்கிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 5 இன்னிங்ஸில் விளையாடிய அவரின் சராசரி 6.20 ரன்கள் மட்டுமே.
அதற்கு முன்னதாக, சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வைட்வாஷ் ஆனது. அந்த தொடரிலும் ரோகித் சர்மா மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார். 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரின் அவரின் சராசரி 15.16 ரன்கள் மட்டுமே. இருப்பினும், அதன் பிறகு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்று அசத்திய காரணத்தால், ரோகித் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க பிசிசிஐ முனைப்பு காட்டியது.
தொடர்ந்து சொதப்பி வந்த ரோகித் சர்மா:
குறிப்பாக, அடுத்த மாதம், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தொகுத்து வழங்கிய பாட்காஸ்டில், "இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு தலைமை தாங்குவது உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது" என கூறியிருந்தார்.
இதற்கிடையே, இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழு கடந்த மாதம் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தியது. நேற்று, மும்பையில் இந்த விவகாரம் குறித்தும் விவாதித்திருக்கின்றர். சரியாக விளையாடாக காரணத்தால் ரோகித் சர்மாவை கேப்டனாக தொடர வைப்பதில் தயக்கம் காட்டி இருக்கின்றனர். அதோடு, சிறப்பாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து குறித்து பிசிசிஐயிடம் தெரிவித்திருக்கின்றனர்.
அடுத்த கேப்டன் யார்?
இந்த நிலையில், அணியில் இருந்து பிசிசிஐ தூக்குவதற்கு முன்பே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். முன்னதாக, ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து ஏபிபி உச்சி மாநாட்டில் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர், "அணியில் ரோகித்தின் எதிர்காலம் குறித்த எந்தவொரு முடிவும் தேர்வாளர்களால் எடுக்கப்படும்" என்றார்.
67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மாவின் சராசரி 40.57 ரன்கள் ஆகும். இந்தியாவிற்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 31.01 ரன்கள் ஆகும். ஆஸ்திரேலியாவில் அவரது சராசரி 24.38 ஆகவும், தென்னாப்பிரிக்காவில் 16.63 ஆகவும் உள்ளது. ஆனால், இங்கிலாந்தில் அவரது சராசரி 44.66 ரன்கள் ஆகும். இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




















