மேலும் அறிய

Kohli Incredible Record: கோலிக்கும் பொங்கல் நாளான தை முதல் நாளுக்கும் தொடரும் பந்தம்.. இப்படியும் ஒரு சாதனையா..!

தை முதல் நாளான ஜனவரி 15ம் தேதியன்று சதமடித்து, விராட் கோலி மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய அணி பேட்டிங்:

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தது. ரோகித் சர்மா 42 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில்  116 ரன்களை சேர்த்தார்.

கோலி அதிரடி:

இதனிடையே, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கோலி 48 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சேர்த்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். சுப்மன்கில் ஆட்டமிழந்ததும் கோலி தனது ஆட்டத்தை வேகப்படுத்தினார். இதன் மூலம், அடுத்த 37 பந்துகளிலேயே 50 ரன்களை சேர்த்தார். இதன் மூலம், 85 பந்துகளிலேயே கோலி தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 46வது மற்றும் சர்வதேச போட்டிகளில் அடிக்கும் 74வது சதமாகும். இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, அதிரடி காட்டிய கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 8 சிக்சர்கள்  மற்றும் 13 பவுண்டரிகளுடன் 166 ரன்களை குவித்தார். 

ஜனவரி 15ம் தேதியில் சதம்: 

இன்றைய போட்டியில் கோலி அடித்த சதமானது, தை முதல் நாளான ஜனவரி 15ம் தேதியில் அவர் அடிக்கும் நான்காவது சர்வதேச சதமாகும். அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 122 ரன்களும், 2018ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 153 ரன்களையும் குவித்தார். இதேபோல், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 104 ரன்களையும், இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 166 ரன்களையும் கோலி சேர்த்து அசத்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் வேறு எந்த வீரரும் இந்த சாதனையை படைத்ததில்லை என கூறப்படுகிறது.

 

சிக்சர்களில் சாதனை:

ஒருநாள் போட்டிகளில் அவர் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அவர் அதிகபட்ச சிக்சர்களும் இன்றைய போட்டியில் அடித்த 8 சிக்சர்கள் தான். 

சச்சினின் சாதனை முறியடிப்பு:

3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சொந்த மண்ணில் தனது 21வது சதத்தை அடித்த கோலி, 20 சதங்களை அடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.. ஒரு அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார். அதன்படி, சச்சின் மற்றும் கோலி இருவரும் இலங்கைக்கு எதிராக தலா 9 சதங்கள் அடித்து முதலிடத்தில் இருந்தனர். இன்றைய சதத்தின் மூலம் அந்த சாதனை பட்டியலில் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.  இது அனைத்து வடிவ கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரு அணிக்கு எதிராக, தனிநபரால் அடிக்கப்பட்டஅதிகபட்ச சதங்களின் எண்ணிக்கை ஆகும்.

பார்ட்னர்ஷிப்பில் சாதனை:

ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்கி அதிகமுறை 150 ரன்களை கடந்த வீரர் என்ற பட்டியலில் கோலி முதலிடம் பிடித்துள்ளார், அதன்படி, 5 முறை கோலி ஒருநாள் போட்டிகளில் 150 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான் ரோகித் சர்மா(8), சச்சின் (5) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களின் பட்டியலில், ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி கோலி(73) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் (99) முதலிடம் பிடித்துள்ளார்.

அதிக ரன்களிலும் சாதனை:

முன்னதாக இன்றைய ஆட்டத்தில் 62 ரன்களை எடுத்தபோது, கோலி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்தார், 12,650 ரன்கள் எடுத்து ஐந்தாவது இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்தனேவை கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார். கோலி இதுவரை 46 ஒருநாள் சதங்கள், 27 டெஸ்ட் சதங்கள் மற்றும் ஒரு டி20 சதங்களை அடித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Embed widget