Jadeja Century: செஞ்சுரி விளாசிய ஜடேஜா... 460+ ரன்கள் கடந்து இந்திய அணி அசத்தல்
10 பவுண்டரிகள் விளாசிய ஜடேஜா, 166 பந்துகளில் 102* ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஜடேஜாவுக்கு இரண்டாவது சதமாகும்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 357 ரன்கள் எடுத்தது.
இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஜடேஜாவும், அஷ்வினும் விளையாடினர். 130 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்று இருவரும் ரன் சேர்த்தனர். அஷ்வின் அரை சதம் கடக்க, இந்திய அணி 400 ரன்களை கடந்து விளையாடியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜடேஜா, சதம் கடந்து அசத்தினார். 10 பவுண்டரிகள் விளாசிய ஜடேஜா, 166 பந்துகளில் 102* ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஜடேஜாவுக்கு இரண்டாவது சதமாகும்.
Lunch on Day 2 of the 1st Test.
— BCCI (@BCCI) March 5, 2022
130 run partnership between Jadeja and Ashwin and a brilliant century from @imjadeja as #TeamIndia are 468/7 at Lunch.
Scorecard - https://t.co/c2vTOXAx1p #INDvSL @Paytm pic.twitter.com/iqEPRNKEci
61 ரன்கள் எடுத்திருந்தபோது அஷ்வின் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து ஜெயந்த் யாதவ் களமிறங்கி இருக்கிறார்.இந்திய பேட்டர்களின் அதிரடியால், இரண்டாம் நாள் முதல் செஷன் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 468 ரன்கள் குவித்திருக்கிறது இந்திய அணி.
முதல் நாள் ஆட்டத்தின்போது, அதிரடியாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார் பண்ட். அவர் சதம் கடப்பார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டபோது, லக்மல் பந்துவீச்சில் பவுல்டாகி அவுட்டானார். பண்ட் மற்றும் ஜடேஜா இணை 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நேற்றும், இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய பேட்டர்கள் சிறப்பான ஸ்கோரை எட்டும் முனைப்பில் விளையாடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்