Women's T20 World Cup:டி20 உலகக் கோப்பை - நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கும் இந்தியா! வெற்றிக் கணக்கை தொடங்குமா?
டி20 உலகக் கோப்பையின் இந்திய அணிக்கான முதல் போட்டி இன்று (அக்டோபர் 4) நடைபெற உள்ளது.அந்த வகையில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோத உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து:
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 மகளிர் போட்டி நேற்று (அக்டோபர் 3) பிரமாண்டமாக தொடங்கியது. இந்த போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கான முதல் போட்டி இன்று (அக்டோபர் 4) நடைபெற உள்ளது.
அந்த வகையில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோத உள்ளது. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட் ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சாகோஷ், ஹேமலதா ஆகியோரும், பந்துவீச்சில் தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்ட்ரகர், ரேணுகா சிங், ராதா யாதவ், ஆஷா சோபனா ஆகியோரும் உள்ளனர்.
சோபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் அமெலியா கெர்,பேட்ஸ்,ஜார்ஜியா பிளிம்மர்,லியா தஹுஹு, ஜெசிகா கெர், ஈடன் கார்சன், மேடி கிரீன், பிரான் ஜோனாஸ், புரூக் ஹாலிடே, ரோஸ்மேரி மெய்ர் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர். இதுவரை இந்திய மகளிர் அணி எந்த உலக கோப்பையையும் வெல்லவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றது. இச்சூழலில் தான் இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் டி20 சாதனை மற்றும் புள்ளிவிவரங்கள்:
மொத்த டி20 போட்டிகள்: 97
முதலில் பேட்டிங் செய்த போட்டிகள்: 45
பந்துவீச்சில் முதலில் வென்ற போட்டிகள்: 51
சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 141
சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்: 125
அதிகபட்ச ஸ்கோர்: 212/2 IND vs AFG
துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்: இலங்கைக்கு எதிராக 184/8
குறைந்த ரன்கள்: WI vs ENG மூலம் 55 ஆல் அவுட்
இந்திய மகளிர் அணி:
ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா , ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் , ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா , பூஜா வஸ்த்ரகர் , ஸ்ரேயங்கா பாட்டீல் , அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ரேணுகா தாகூர் சிங், தயாளன் ஹேமலதா யாஸ்திகா பாட்டியா, ஆஷா சோபனா
நியூசிலாந்து மகளிர் அணி:
சுசி பேட்ஸ், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ் (விக்கெட் கீப்பர்), ஹன்னா ரோவ், ரோஸ்மேரி மெய்ர், ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ், லியா தஹுஹு, லீ காஸ்பெரெக், ஜெஸ் கெர், மோலி பென்ஃபோல்ட், ஜார்ஜியா ப்ளிம்மர்