மேலும் அறிய

Ind vs Eng Test: கிரிக்கெட் பேட் வாங்க கூட கடன்தான் வாங்குனோம்... இந்திய டெஸ்ட் அணியில் தேர்வான துருவ் ஜூரல் உருக்கம்!

Ind vs Eng Test: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:

இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

அந்த வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி:

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இச்சூழலில், இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி, ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.

கடன் வாங்கினோம்:

இதில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரல் இந்திய அணி சார்பில் அறிமுகமாகியிருக்கார். இந்நிலையில் தான் இந்திய அணியில் இடம்  பெற்றது குறித்து துருவ் ஜூரல் பேசியுள்ளார்.

அதில், “நான் ராணுவப் பள்ளியில் படித்தேன். விடுமுறை நாட்களில் ஆக்ராவில் உள்ள ஏக்லவ்யா ஸ்டேடியத்தில் கிரிக்கெட் முகாமில் சேர வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான படிவத்தை நிரப்பினேன். ஆனால் இது குறித்து என் அப்பாவிடம் சொல்லவில்லை. அவருக்குத் இது தெரிந்ததும், அவர் என்னைத் திட்டினார்.

ஆனால், எனக்கு கிரிக்கெட் பேட் வாங்க ரூ.800 கடன் வாங்கினார். எனக்கு கிரிக்கெட் கிட் வேண்டும் என்று சொன்னபோது, அப்பா என்னிடம் அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை செலவாகும் என்று சொன்னேன். இதை கேட்டதும் என் அப்பா விளையாடுவதை நிறுத்தச் சொன்னார்.

தங்க சங்கிலியை விற்ற தாய்:

ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். குளியலறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். பின்னர் என் அம்மா தனது தங்கச் சங்கிலியை விற்று எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கித் தந்தார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது நான் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளேன் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். நான் இதை என் குடும்பத்திடம் சொன்னேன். அப்போது அவர்கள் என்னிடம் எந்த இந்திய அணிக்காகவா தேர்வாகி உள்ளாய்? என கேட்டார்கள்.

நான் அவர்களிடம் ரோகித், விராட் ஆடும் இந்திய அணியைச் சொன்னேன். இதைக் கேட்டதும் எனது ஒட்டுமொத்த குடும்பமும் உணர்ச்சிவசப்பட்டது”என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் துருவ் ஜூரல்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
CHN AC Electric Bus: சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
State Education Policy: 3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
Rahul Warns EC: “காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
“காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
Embed widget