மேலும் அறிய

WTC Points Table: இங்கிலாந்துக்கு செக்; உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

India vs England, 2nd Test: இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் விளாசி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினார். 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அணிக்கு சிறப்பான முதல் இன்னிங்ஸ் அமைய காரணமாக இருந்தார். ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 19 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் விளாசி 209 ரன்கள் சேர்த்து அமர்க்களப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் சேர்த்தது. 

அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 3 வீக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் சேர்த்த நிலையில் ஆல் அவுட் ஆனதால், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை 143 ரன்கள் முன்னிலையில் தொடங்கியது. 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் சுப்மன் கில் சதம் விளாசி இந்திய அணி சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயிக்க காரணமாக இருந்தார். சுப்மன் கில் 147 பந்துகளில் 11 பவுண்டரி இரண்டு சிக்ஸர் என 104 ரன்கள் குவித்தார். அதேபோல் இந்திய அணியின் அக்‌ஷர் பட்டேல் 84 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் விளாசியதுடன் 45 ரன்கள் சேர்த்திருந்தார். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 398 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 

அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் நெருக்கடியான பந்து வீச்சுக்கு மத்தியிலும் சிறப்பாக விளையாடியது. இங்கிலாந்து அணி சார்பில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி தங்களது தோல்வி வித்தியாசத்தை குறைக்க உதவியதே தவிர, இந்தியாவின் வெற்றி வாய்ப்பினை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி இறுதியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 52.77 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா அணி உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் புள்ளிகள் 55. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல் 

முதல் இடம் - ஆஸ்திரேலியா 

இரண்டாவது இடம் - இந்தியா 

மூன்றாவது இடம் - தென்னாப்பிரிக்கா

நான்காவது இடம் - நியூசிலாந்து 

ஐந்தாவது இடம்  - பங்களாதேஷ்

ஆறாவது இடம் - பாகிஸ்தான்

ஏழாவது இடம் - வெஸ்ட் இண்டீஸ்

எட்டாவது இடம்  - இங்கிலாந்து 

ஒன்பதாவது இடம்  - ஸ்ரீ லங்கா 

தலைப்பு செய்திகள்

"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget