IND vs BAN ODI Score Live: வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
IND vs BAN ODI Score Live: டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளதால், இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

Background
IND vs BNG: இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. தொடரை இழந்த இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆறுதல் வெற்றி கிட்டுமா..?
இந்திய அணி வங்காள தேசத்துக்கு பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டது. இதில் ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு ஒருநாள் போட்டியிலும், வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரை வென்றது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று ஆறுதல் வெற்றியைப் பெறுமா? என ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர்.
முதல் போட்டியில் இந்திய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணி, இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு போட்டிகளிலும் இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த வங்கதேச அணி மூன்றாவது போட்டியையையும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி தோற்றால் தொடரை முழுமையாக இழந்து, ஒயிட்-வாஷ் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Learning from one of the best! 👌 👌@Sundarwashi5 gets some batting tips from Head Coach Rahul Dravid 👍 👍#TeamIndia | #BANvIND pic.twitter.com/YgvZRNKyfr
— BCCI (@BCCI) December 9, 2022
கேப்டன் இல்லை
இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு இரண்டாவது போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளார். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறிய இந்திய அணியின் கேப்டன், மீண்டும் பேட்டிங்கின் போது களமிறங்கி, அதிரடியாக அரைசதம் விளாச்சினார். ரோகித் ஷர்மா நேற்று சிகிச்சைகாக மும்பை வந்தடைந்தார். இரண்டாவது போட்டியை வழிநடத்திய துணை கேப்டன் கே.எல். ராகுல் இந்த போட்டியை வழிநடத்தவுள்ளார்.
இந்திய அணி:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்
வங்கதேச அணி: அனாமுல் ஹக், லிட்டன் தாஸ் (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், யாசிர் அலி, முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், எபடோட் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது
இந்த போட்டியானது, ஜஹூர் அகமத் சவுத்ரி மைதானத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டியை சோனி லைவ் சேனலிஉல் நேரடியாக காணலாம்.
வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 182 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IND vs BAN ODI Score Live: வறண்ட நிலையில் வங்கதேசம்... 7 விக்கெட் இழந்து வாடும் சோகம்..!
இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 28 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.




















