Virat Kohli: கோவத்தை காட்டினாலும் கோலி கோலிதான்... வங்கதேச வீரருக்கு விராட் அளித்த பரிசு...!
வங்கதேச பந்துவீச்சாளர் ஆஃப் ஸ்பின்னர் மெகிடி 63 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில் ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச தேசிய கிரிக்கெட் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய தேசிய கிரிக்கெட் அணி.
டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம், இந்தியா மதிப்புமிக்க ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
இந்தியா தனது முதல் இன்னிங்சில் வங்கதேசத்தை 227 ரன்களுக்கு சுருட்டியது. பேட்டிங்கைத் தேர்வு செய்த பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 157 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் (4/25) மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் (4/71) முறையே 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதே சமயம் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் (2/ 50) மீதமுள்ள இரண்டையும் கைப்பற்றியதால் இந்தியா 73.5 ஓவர்களில் வங்கதேசத்தை அவுட்டாக்கியது.
டாக்காவில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்தது.
80 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில், 3 நாள் ஆட்டம் நேற்று முன் தினம் தொடங்கியது. தொடக்க வீரர் நஜ்முல் ஹொசைச் 5 ரன்களில் வெளியேற, 3 வதாக களமிறங்கிய மொமினுல் 5 ரன்களில் சிராஜ் பந்தில் பண்ட்டிடம் கேட்சானார். தொடர்ந்து கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹ்மான் வெளியேறினார். மறுமுனையில், தொடக்க வீரர் ஜகிர் ஹாசன் நங்கூரம் போல் நின்று அரைசதம் கடந்து உமேஷ் பந்துவீச்சில் சிராஜிடம் கேட்சானார்.
145 ரன்கள் இலக்கு:
அடுத்து உள்ளே வந்த லிட்டன் தாஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துல் 73 ரன்களில் வெளியேற, மெகிடி டக் அவுட்டாகி நடையைக் கட்டினார். நுரூல் ஹாசன் 31 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 1 ரன்னுடம், கலீல் அஹமது 4 ரன்களுடனும் அவுட்டானார்கள். தஸ்கின் அஹமது மட்டும் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
இந்தியா வெற்றி:
இந்தியா- வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் 3ம் நாள் முடிவில் இந்திய அணி 45-4 என்ற மோசமான சூழ்நிலையில் இருந்தது. தொடர்ந்து 4வது நாள் தொடங்கிய இந்திய அணி, ஜெய்தேவ் உனத்கட்டை இழந்தது.
அதன் தொடர்ச்சியாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 9 ரன்களை எடுத்து மெகிடி ஹாசன் பந்து வீச்சில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அதன்பிறகு, ஷ்ரேயஸ் ஐயர்- அஸ்வின் ஜோடி வங்கதேசத்தின் பந்துவீச்சில் அஸ்திவாரத்தை ஆட்ட தொடங்கினர். இருவரும் தேவையான நேரத்தில் பந்துகளை பவுண்டரிகளுக்கு ஓடவிட்டு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
தொடர்ந்து, இருவரும் சிறப்பாக ஆட இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ரவிசந்திரன் அஷ்வின் 42 ரன்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர் 29 ரன்களுடனும் அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக மெகிடி ஹாசன் 5 விக்கெட்களும், கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.
விராட் கோலி அளித்த பரிசு:
Special souvenir from one of the greatest cricketer Virat Kohli. 🤝 pic.twitter.com/y67twA2Rle
— Mehidy Hasan Miraz (@Officialmiraz) December 25, 2022
இந்திய அணியின் வெற்றிக்கு தடையாக இருந்தது மெகிடி ஹாசனின் ஜந்து விக்கெட்கள்தான். 145 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணியை, தடுக்க வங்கதேசம் கடுமையாக போராடியது. வங்கதேச பந்துவீச்சாளர் ஆஃப் ஸ்பின்னர் மெகிடி 63 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்தநிலையில், கோலி போட்டி முடிந்ததும் தனது ஜெர்சியை 5 விக்கெட்களை வீழ்த்திய மெகிடிக்கு தனது 18 ம் நம்பர் பொறித்த ஜெர்சியை பரிசளித்தார். இதையடுத்து மெகிடி, தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.
அந்த பதிவில், சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு" என்று மெஹிடி அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
விராட் கோலியில் கோவம்:
முன்னதாக, 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோலி ஆட்டமிழந்தபோது வங்கதேச வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விராட் கோலி கோபப்பட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Why was Virat Kohli refusing to walk after getting dismissed? #BANvIND pic.twitter.com/trNQs4QTZj
— Farid Khan (@_FaridKhan) December 24, 2022
2வது இன்னிங்ஸில் விராட் கோலி 20 ஆவது ஓவரில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அவர் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அப்போது, தைஜுல் இஸ்லாமுடன் அவர் வாக்குவாதத்தில் சற்று கோபாமாக பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், அதற்குள் வங்கதேச வீரர்களும் நடுவர்களும் வந்து கோலியை சமாதானப்படுத்தினர். அந்த வீடியோவும் இணையத்தில் படு வைராலானது.