India vs Australia LIVE SCORE: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் இன்றைய சூப்பர் 8 சுற்று போட்டியின் நேரலையை இங்கே பார்ப்போம்:

Background
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 24) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 31 டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக இந்திய அணி 19 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் போயுள்ளது. அதேநேரத்தில், டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், இந்திய அணி 3 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
சூப்பர்-8 சுற்றில் இரு அணிகளும் மோதும் கடைசிப் போட்டி இதுவாகும். இந்திய அணி, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணி, வங்கதேசத்திற்கு எதிராக வெற்றியும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா:
டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தியா (பிளேயிங் லெவன்):
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா
ஆஸ்திரேலியா அணி (பிளேயிங் லெவன்):
டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ்(கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர் ), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
India vs Australia LIVE SCORE: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்திய அணி.
India vs Australia LIVE SCORE: டிம் டேவிட் அவுட்!
டிம் டேவிட் 15 ரன்களில் அர்ஸ்தீப் சிங் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.




















