Women's T20 World Cup: அரையிறுதியில் களமிறங்க மாட்டாரா ஹர்மன்பிரீத்? அச்சச்சோ... என்னதான் ஆச்சு?
ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஆல்-ரவுண்டர் பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய அரையிறுதி போட்டியில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஆல்-ரவுண்டர் பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய அரையிறுதி போட்டியில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை அரையிறுதி:
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதிபெற்றது. ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்தது.
இருப்பினும், குரூப் பி பிரிவில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்று இன்று ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்தநிலையில், இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் விளையாட முடியாமல் போனால், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா அணிக்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஹர்மன்ப்ரீத் மற்றும் வஸ்த்ரகர் இருவரும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், இன்னும் அவர்கள் முழு உடற்தகுதி பெறாததால் விளையாடுவார்களா என்று தெரியவில்லை.
ஹர்மன்பிரீத் கவுர்:
மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்மன்பிரீத் கவுர் வெறும் 66 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். இருப்பினும், அவரது தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
ஆல்-ரவுண்டர் பூஜா வஸ்த்ரகர்:
இந்த தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள வஸ்த்ரகர் 2 விக்கெட்களை மட்டுமே எடுத்திருந்தாலும், ரேணுகா சிங்குடன் இணைந்து வேகத்தில் எதிரணிகளை திணற செய்தார். ஒருவேளை இவர்கள் இருவரும் விளையாடாமல் போனால் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோருக்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்படும்.
கணிக்கப்பட்ட பிளேயிங் 11:
இந்தியா:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்
ஆஸ்திரேலியா:
பெத் மூனி (விக்கெட் கீப்பர்), எலிஸ் பெர்ரி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்