Mohammed Siraj: இன்றைய போட்டியில் இரண்டு விக்கெட்.. முதலிடத்திற்கு சென்ற சிராஜ்.. ஒருநாள் போட்டியில் இப்படி ஒரு சாதனையா?
முகமது சிராஜ் இன்றைய போட்டிகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் 2022 ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முகமது சிராஜ் இன்றைய போட்டிகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் 2022 ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணிக்கு எதிராக 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரர்களான அனாமுல் ஹக் மற்றும் லிட்டன் தாஸ் வந்த வேகத்தில் சிராஜின் வேகத்தில் வெளியேறினர்.
What a bowled
— Shaikh Mohammed kais (@kais17777) December 7, 2022
.
.
.#indvsban #Siraj pic.twitter.com/RZZwJg7MFI
இந்த இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் 2022 ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தாண்டு 14 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ், 23 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, யுஸ்வேந்திர சாஹல் 14 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்களை எடுத்துள்ளார்.
2022 ம் ஆண்டு இந்தியா அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:
- முகமது சிராஜ்: போட்டிகள் -14 (விக்கெட்டுகள் -23)
- யுஸ்வேந்திர சாஹல்: போட்டிகள்-14 (விக்கெட்டுகள்-21)
- பிரசித் கிருஷ்ணா: போட்டிகள்-11 (விக்கெட்டுகள்-19)
- ஷர்துல் தாக்கூர்: போட்டிகள்-15 (விக்கெட்டுகள்-19)
இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு:
96 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த மஹ்முதுல்லாஹ், உம்ரான் மாலிக் வீசிய 47 வது ஓவரில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து உள்ளே வந்த நாசூம் அகமது தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து 18 ரன்கள் குவிக்க, மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற மெஹிதி ஹசன் 83 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களும், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலில் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர். தற்போது. 46 ஓவர் முடிவில் 231 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.