மேலும் அறிய

India New T20 Coach: இந்திய டி20 அணிக்கு இனி புதிய பயிற்சியாளர்.. தீவிர யோசனையில் பிசிசிஐ.. அப்போ ராகுல் டிராவிட்..? 

இந்திய டி20 அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிப்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்திய டி20 அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிப்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்தியாவின் டி20 பார்மெட்டுக்கு மட்டும் தனி பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்திய டி20 அணிக்கான புதிய பயிற்சியாளர் தலைமையிலான இந்திய படை வருகின்ற ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளரின் கீழ் இந்திய அணியினர் வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கிறது. 

இந்த இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா, இந்திய டி20 அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த வரிசையில் இந்திய டி20 அணிக்கு புதிய பயிற்சியாளரும் நியமிக்கப்பட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு வழக்கம்போல் செயல்படுவார். அதேநேரத்தில் டி20 போட்டிகளுக்கு மட்டும் தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட இருக்கிறார். 

இருப்பினும், தற்போதுவரை யார் பெயரை பிசிசிஐ பரிசீலிக்கவில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

ஹர்திக் பாண்டியா டி20 கேப்டன்: இந்தியாவின் புதிய டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஜனவரியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் மூலம் களமிறங்குவார். இதில் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இனி இந்தியாவின் டி20 போட்டிகளில் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

அதேபோல், இந்திய அணியின் அனுபவ வீரர்களான முகமது ஷமி, ரவிசந்திரன் அஷ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்திய டி20 அணியில் இடம்பெற மாட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்படுவதால், தொடரில் இருந்து விலக உள்ளார்.

ஜனவரிக்கு பிறகு மூன்று பார்மேட் கேப்டன்கள் யார் யார்..? 

  • டி20 கிரிக்கெட்:  இலங்கை தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா இந்திய கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார்.
  • ஒருநாள் கிரிக்கெட்:  அடுத்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • டெஸ்ட் கேப்டன்: வரும் உலக டெஸ்ட் சாம்பியன் தொடர் வரை ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

வெளியான தகவலின்படி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 வடிவிலான கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால், அவரது பணி சுமை அதிகமாக உள்ளதாக பிசிசிஐ கருதுகிறது. இதனால், பயிற்சியாளர்கள் பதவிகளை பிரிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. அதன் அடிப்படையில், முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியை டி20 வடிவத்தில் மட்டும் இயக்குனராக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தோனியின் திறமைகளை பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் அணியின் தரத்தை உயர்த்தவும், இளம் வீரர்களின் திறமையை வெளிகொண்டு வரலாம் என்று பிசிசிஐ நம்பிக்கை கொண்டுள்ளது. அறிக்கையின்படி, இந்த மாத இறுதியில் பிசிசிஐ தலைமை கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Spl. Train for Girivalam: கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Most Expensive ICE SUV: இந்த கார்லா ஓடுமா? பறக்குமா? தாறுமாறான விலை - டாப் 5 ICE எஸ்யுவி கார் மாடல்கள்
Most Expensive ICE SUV: இந்த கார்லா ஓடுமா? பறக்குமா? தாறுமாறான விலை - டாப் 5 ICE எஸ்யுவி கார் மாடல்கள்
Embed widget