IND W vs SA W Final: ஆரம்பத்தில் ஷாஃபாலி அதிரடி.. இறுதியில் சொதப்பிய இந்தியா.. தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு என்ன?
IND W vs SA W Final Womens World Cup 2025: மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 299 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்யணத்துள்ளது.

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 299 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்யணத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி:
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மகளிர் 50 ஓவர் இறுதிப்போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதிரடி தொடக்கம்:
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஷாபாலி வர்மா மற்றும், ஸ்மிருதி மந்தனா அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். குறிப்பாக பவர்பிளேயை சிறப்பாக பயன்படுத்தி ஓவருக்கு ஒரு பவுண்டரி என இந்திய அணி வேகமாக ரன்களை சேர்த்தது. 10 ஓவர்கள் முடிவில் இந்திய 64 ரன்களை எடுத்தது.
ஷாஃபாலி வர்மா அதிரடியாக ஆட அவருக்கு பக்கபலமாக ஸ்மிருதி மந்தனா நிதானமாக ஆடி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த நிலையில் மந்தனா 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஜெமிமா ஏமாற்றம்:
கடந்த போட்டியின் நாயகியான ஜெமிமா அடுத்ததாக களமிறங்கினார். ஷஃபாலி அதிரடியை தொடர் இந்திய அணி 25வது ஓவரில் 150 ரன்களை கடந்தது. அப்போது ஜெமிமா(24), ஷாஃபாலி(87) ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இதன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்து அணியை நல்ல ஸ்கோர் அடிக்க முயன்றனர்.
காப்பாற்றிய ரிச்சா கோஷ்:
கேப்டன் ஹர்மன் 20 ரன்னுக்கு நடையை கட்ட அடுத்து வந்த அமன்ஜோத் கவுர் 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 300 ரன்களை தொடுமா என்கிற கேள்வி எழும்பியது. 7வது வீரராக ரிச்சா கோஷ் தனது அதிரடியை காட்டினார், இதனால் மீண்டும் இந்திய அணியின் ஸ்கோர் எகிற தொடங்கியது. 320 ரன்களை இந்திய நெருங்கும், என்று எதிர்ப்பார்த்த நிலையில் 49வது ஓவரில் 34 ரன்களுக்கு ரிச்சா கோஷ் ஆட்டமிழந்தார். மறுப்பக்கம் தீப்தி சர்மா தனது அரை சதத்தை கடந்தாலும் அவரால் இறுதி ஓவர்களில் அதிரடி காட்ட முடியவில்லை.
299 இலக்கு:
இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அயபோங்கா காக்கா 3 விக்கெட்டு எடுத்து இந்திய அணியின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.





















