IND-W vs PAK-W : பெண்களுக்கான ஆசிய கோப்பை போட்டி: இந்தியாவுக்கு 138 ரன்கள் இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்!
IND-W vs PAK-W : பெண்களுக்கான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய பெண்கள் அணிக்கு பாகிஸ்தான் பெண்கள் அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
இந்திய பெண்கள் அணிக்கு 138 ரன்கள் இலக்கினை பாகிஸ்தான் பெண்கள் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 138 ரன்கள் இலக்கினை நிர்ணையித்துள்ளது.
வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரத்தில் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 13வது போட்டியில் இந்தியா – பாகிதஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி சில்ஹெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷபாலி வர்மா, மேக்னா சிங் இடம்பெறவில்லை.
Pakistan post 137/6 against India in #WomensAsiaCup2022.#INDvPAK | Scorecard: https://t.co/q7hQyhCr1p pic.twitter.com/U6LXjx3CRL
— ICC (@ICC) October 7, 2022
நடப்புத் தொடரைப் பொறுத்தவரையில் இந்திய அணி இதுவரை தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அதனால், இந்திய அணி இன்றைய போட்டியில் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளது. பாகிஸ்தான் அணி நேற்று நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து அணியிடம் ஒரு பந்து மீதம் வைத்து தோல்வியடைந்தது. இதனால், பாகிஸ்தான் வீராங்கனைகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத்கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா, மேக்னா, தீப்தி ஷர்மா, ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் பேட்டிங்கில் முக்கிய வீராங்கனையாக உள்ளனர்.
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) October 7, 2022
Target 🎯 for #TeamIndia - 1⃣3⃣8⃣
Over to our batters now. 👍👍
Scorecard ▶️ https://t.co/pWHNEjvpeh#AsiaCup2022 | #INDvPAK pic.twitter.com/whT0tJ1OVg
பாகிஸ்தான் அணியை பொறுத்தமட்டில், நிடா டார் 37 பந்துகளில் ஐந்து ஃபோர்கள் மற்ற்றூம் ஒரு சிக்ஸர் உட்பட 56 ரன்கள் விளாசினார். மரூஃப் 32 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் குறிப்பிடும் படியான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை.
இந்திய அணியை பொறுத்த வரையில் சிறப்பாக பந்து வீசிய தீப்தி ஷர்மா நான்கு ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து, மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். பூஜா வஸ்ட்ராக்கர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணி மொத்தம் 6 பவுலர்களைக் கொண்டு இந்த போட்டியில் விளையாடியது. தொடக்க ஓவர்களில் சொதப்பி வந்தாலும், இருபது ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் பெண்கள் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக பந்து வீசிய இந்திய பெண்கள் அணி தற்போது 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கவுள்ளது.