IND vs SL ODI: இலங்கை அணிக்கு எதிராக புயலாய் திரும்பி வந்த பும்ரா.. ஒருநாள் போட்டியில் மீண்டும் இடம்..!
இலங்கை தொடருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று இருபது ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி, இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதலாவது இருபது ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்தநிலையில், இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் கிரிக்கெட்டில் இருந்து விலகினார். இதன் காரணமாக டி20 உலகக் கோப்பையிலும் பும்ரா விளையாடவில்லை. இந்தநிலையில், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதிபெற்றார். இதையடுத்து, விரைவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளார்.
இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் ஒருநாள் போட்டி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.
| மாஸ்டர்கார்டு இலங்கை சுற்றுப்பயணம், 2023 | |||||
| எண் | நாள் | தேதி | நேரம் | தொடர் | இடம் |
| 1 | செவ்வாய் | ஜனவரி 10 | பிற்பகல் 1:30 | ODI1 | கவுகாத்தி |
| 2 | வியாழன் | ஜனவரி 12 | பிற்பகல் 1:30 | ODI2 | கொல்கத்தா |
| 3 | ஞாயிற்றுக்கிழமை | ஜனவரி 15 | பிற்பகல் 1:30 | ODI3 | திருவனந்தபுரம் |




















