Watch Video | பாசக்காரப்பய..! கேமராமேனுக்கு காஃபி வேணுமா என்ற ரோகித்! ஹிட்மேனின் வைரல் வீடியோ!!
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. அதில் முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 74* ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
நேற்றைய போட்டியின் போது ரோகித் சர்மா காஃபி குடிக்கும் வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Just what you need in the cold Dharamsala weather ☕️@ImRo45 pic.twitter.com/xUgz8W9ERR
— BCCI (@BCCI) February 26, 2022
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றதன் அதிகமாக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 போட்டிகளில் வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதுவரை சொந்த மண்ணில் அவர் 17 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 16 போட்டிகளில் இவர் வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தப் பிறகு தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக அதிகமான டி20 போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற ஆஃப்கானிஸ்தானின் சாதனையை இந்திய அணி சமன் செய்யும். 2019ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்