மேலும் அறிய

Mohammed Siraj: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... அனலாய் பறந்த முகமது சிராஜ்! அசத்தல் ரெக்கார்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி:

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.

ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று  ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன்படி, தென்னப்பாரிக்காவில் உள்ள கேப்டவுன்  நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அந்த அணியை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மிராட்டியுள்ளர்.

6 விக்கெட்டுகள் அலறவிட்ட சிராஜ்:

அதன்படி, தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான ஐடன் மார்க்ராம் மற்றும் அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் இருவரையும் அலறவிட்டார் முகமது சிராஜ்.  8 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்னாப்பிரிக்கா. இதனிடையே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இந்திய அணி வீரர் பும்ரா வீசிய பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.  பின்னர் வந்த டோனி டி ஜோர்ஜி முகமது சிராஜ் வீசிய பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார்.

முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற டேவிட் பெடிங்காம் இந்த ஆட்டத்தில் நிதனமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், முகமது சிராஜ் வீசிய பந்து ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். அதேபோல், மார்கோ ஜான்சன் ரன் ஏதும் இன்றி முகமது சிராஜின் வேகப்பந்தில் தாக்குபிடிக்க முடியாமல் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்தார்.

சற்று நிதானமாக ஆடிய  Kyle Verreynne  15 ரன்களில் சிராஜ் வீசிய பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டானார். இப்படி முகமது சிராஜ் 9 ஓவர்கள் வீசி 3 மெய்டன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 

மேலும் படிக்க: Sachin Tendulkar: "தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டெண்டுல்கர்தான் வல்லவர்" முன்னாள் ஜாம்பவான் ஆலன் டொனால்ட் புகழாரம்

மேலும் படிக்க: MS Dhoni: "ஒரு முறை கூட முடியல" தோனியிடம் எடுபடாத ஜாம்பவான் நாதன் லயனின் பவுலிங்!

தலைப்பு செய்திகள்

CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget