மேலும் அறிய

IND vs SA 2nd Test: படு சொதப்பல்.. இப்படியுமா அவுட் ஆவார்கள்? முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு பேரிடி

இந்தியாவுக்கு எதிரான் இரண்டாவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அதாவது ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் நிதானமாக விளையாடி அதிகப்படியான ரன் குவிப்பில் ஈடுபட்டு, தென்னாப்பிரிக்கா அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்து இன்னிங்ஸ் வெற்றி பெறும் என இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். 

தொடக்கம் இந்திய அணிக்கு சிறப்பாக அமையவில்லை என்றாலும் அதன் பின்னர் வந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணி எடுத்த 55 ரன்களை எளிதில் கடந்து ரன்கள் சேர்க்கத்தொடங்கியது.  தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் ரோகித் சர்மா நிதனமாக விளையாடினார். 50 பந்துககளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகள் விளாசி 39 ரன்கள் எடுத்த நிலையில் பர்கர் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சுப்மன் கில் 55 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சிறப்பாகவும் நிதானமாகவும் விளையாடி வந்த விராட் கோலி அரைசதத்தை நோக்கி முன்னேறி வந்தார். 

ஆனால், அடுத்ததாக களம் இறங்கிய ஸ்ரேய்ஸ் ஐயர் ரன் ஏதும் இன்றி விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் கேல்.எல்.ராகுல் 8 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜடேஜா, பும்ரா, சிராஜ், கிருஷ்ணா, ஆகியோரும் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல்,  அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 46 ரன்களில்  தனது விக்கெட் இழந்து வெளியேறினார்.  இந்திய அணி 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி தனது கடைசி 6 விக்கெட்டுகளை 153 ரன்களுக்கே இழந்தது. குறிப்பாக கடைசி 11 பந்துகளில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ராபாடா, இங்கிடி மற்றும் பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget