IND vs SA 2nd T20 : என்னதான் ஆச்சு? தொடர்ந்து அடிசறுக்கும் ருதுராஜ்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்கள் எடுத்தார், இந்த போட்டியின் போது வெறும் 1 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.
தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டேவிட் மில்லர் மற்றும் வான்டர் டுசென் அதிரடியால் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய இரண்டாவது டி20 போட்டி இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பவுமா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷான் இருவரும் வரவிருக்கும் உலககோப்பை டி20 அணியில் ஒரு இடத்தைப் பிடிக்கும் நோக்கில் இந்திய அணிக்கு இன்னிங்ஸைத் தொடங்கினர், ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஸ்லிப்பை நோக்கி பந்தை எட்ஜ் செய்ததால் ககிசோ ரபாடாவிடம் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்தார்.
இந்தத் தொடரின் முதல் டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்கள் எடுத்தார், இந்த போட்டியின் போது வெறும் 1 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அவர் தனது முந்தைய 5 டி20 இன்னிங்ஸ்களில் அரைசதம் அடிக்கவில்லை, இந்த ஆட்டத்தில் அவரது ஆட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Ruturaj Gaikwad with the bat in T20Is:
— Wisden India (@WisdenIndia) June 12, 2022
Innings - 5
Runs - 63
Average - 12.5
SR - 114.4
Another failure for the Indian opener 🫤🫤#RuturajGaikwad #India #INDvssSA #Cricket #T20Is pic.twitter.com/8SjPq0opeo
Very disappointed with Ruturaj Gaikwad, you can have all talent in the world but you need to make such opportunities count.🤞
— Raghav Acharya (@raghavacharya95) June 12, 2022
He is much better than this.👏#INDvSA #RuturajGaikwad#INDvsSA #TeamIndia pic.twitter.com/n6Wt521HHX
Pure overhyped shit #RuturajGaikwad once again proved what he is a capability.. climb off chances for other dugout players..!!😡 #INDvSA
— George Clooney (@geclooney_) June 12, 2022
#ruturajgaikwad 🙏🙏
— Pushpa_TheRule 🔥 (@sreekanth2245) June 12, 2022
Do some homework and come back hard
You are not ready for big matches#VenkateshIyer played well for indian team
Hope #Rohit brings him back #INDvSA https://t.co/XjXckc0Iye
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்