IND VS SA 2nd ODI: தென்னாப்பிரிக்காவை திணற வைக்குமா இந்தியா..? மோசமான வரலாறு படைப்பதை தவிர்க்குமா..?
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் மோதும் போட்டி, ராஞ்சியில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா முதல் போட்டியில் வென்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்திய அணி முயற்சி செய்யும். ஆனால் இங்கு நடைபெறும் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால், தொடரை இழந்து மோசமான சாதனையை படைக்கும்.
அதிக ஒருநாள் போட்டிகளில் தோல்வி :
ராஞ்சியில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தால், ஒருநாள் போட்டியில் அதிக தோல்வியை சந்தித்த அணியின் பட்டியலில் இலங்கையை சமன் செய்யும். இந்தியா அணி இதுவரை மொத்தம் 1012 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இது எந்த அணியும் விளையாடாத அதிக ஒருநாள் போட்டியாகும். இதில், இந்திய அணி 529 ஆட்டங்களில் வெற்றியும், 433 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. இந்திய அணி விளையாடிய 9 ஆட்டங்கள் டையில் முடிந்த நிலையில், 41ல் எந்த முடிவும் இல்லை.
Preps ✅#TeamIndia geared up for the 2️⃣nd ODI against South Africa. 💪#INDvSA pic.twitter.com/6sR45OvKsp
— BCCI (@BCCI) October 9, 2022
அதிக ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்த அணிகள்:
- இலங்கை -434
- இந்தியா - 433
- மேற்கிந்திய தீவகள் 402
அதாவது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி தோல்வியடைந்தால், அது கூட்டாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை இழந்த அணியாக மாறும். அதாவது, எந்த அணியும் எப்போது விரும்பாத சாதனையாக இது அமையும்.
அதிக ஒருநாள் போட்டிகளில் வென்ற அணி:
- ஆஸ்திரேலியா - 589
- இந்தியா -529
- பாகிஸ்தான் - 498
போட்டி மழையால் பாதிக்கப்படுமா..?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டியும் மழையால் கைவிடப்படலாம். ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் 25 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட இந்தியாவில் தற்போது மழை பெய்து வருவதால், அதன் தாக்கத்தை இங்கும் காணலாம்.
இந்தியா:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ரிதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன். ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், ரஜத் பாடிதார், ஷாபாஸ் 6J..
தென்னாப்பிரிக்கா:
டெம்பா பவுமா (கேப்டன்), ஜான்மேன் மலான், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிக் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தபரிஸ் ஷம்சி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென் பெஹ்லுக்வாயோ.