IND Vs SA 1st T20: மீண்டு வருமா இந்திய அணி? தென்னாப்ரிக்கா உடன் முதல் டி20 போட்டியில் இன்று மோதல்..!
IND Vs SA 1st T20: இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
IND Vs SA 1st T20: இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் டி20 போட்டி, இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
தென்னாப்ரிக்காவில் இந்தியா சுற்றுப்பயணம்:
நியூசிலாந்து அணிக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரை, ரோகித் சர்மா தலைமயிலான இந்திய அணி 3-0 என இழந்தது. நீண்ட நாட்களுக்கு கண்ட இந்த பெரும் தோல்வி, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை தந்துள்ளது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல்போட்டி இன்று நடைபெறுகிறது. அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு, முதல்முறையாக இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் இந்த தொடரில் எதிர்கொள்ள உள்ளன.
இந்தியா Vs தென்னாப்ரிக்கா டி20 போட்டி:
இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் முதல் போட்டி, கிங்ஸ்மீட் பகுதியில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, இரவு 8.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இதன் நேரலையை தொலைக்காட்சியில், ஸ்போர்ட்ஸ் 18 அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் கண்டுகளிக்கலாம். முதல் போட்டியில் வென்று தொடரில் முன்னிலை வகிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன. கடைசியாக இரு அணிகளும் மோதிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 1-1 என சமநிலையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் நிலவரம்:
இந்தியாவின் புதிய டி20 கேப்டனின் கீழ், சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் அட்டகாசமான ஃபார்மில் உள்ளார். இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை தலா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதே உத்வேகத்தில் இந்த தொடரிலும் களமிறங்க உள்ளது. அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் தென்னாப்ரிக்காவை, அவர்களது சொந்த மண்ணில் எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணி ரசிகர்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில், அதிலிருந்து மீண்டு வரும் வகையில் இந்த தொடரில் இந்திய அணி செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், உள்ளூரில் தொடரை கைப்பற்ற வேண்டும் என, தென்னாப்ரிக்கா அணி ஆர்வம் காட்டுகிறது.
நேருக்கு நேர்:
சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 15 முறையும், தென்னாப்ரிக்கா அணி 11 முறையும் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
மைதானம் எப்படி?
கிங்ஸ்மீட் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போதுமான உதவியை வழங்குகிறது மற்றும் விளையாட்டின் கணிசமான பகுதிக்கு அதை பராமரிக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் கூடுதல் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் பெறுவார்கள். மறுபுறம், பேட்ஸ்மேன்கள் தங்கள் ஷாட்களின் டைமிங்கை சரியாக நம்பியிருந்தால் அவர்கள் பயனடையலாம். வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும், மேலும் ஆட்டத்தின் போது மழை பெய்ய 24 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (wk), சூர்யகுமார் யாதவ் (c), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், யாஷ் தயாள்
தென்னாப்ரிக்கா: ரீஸா ஹென்றிக்ஸ், ஐடன் மார்க்ரம், ரியான் ரிகெல்டன், ஹென்றிச் கிளாசென், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், பேட்ரிக் குரூகெர், ஒட்டெனெயில் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸீ, கேஷவ் மஹாராஜ்