IND vs SA 1st ODI : மீண்டும் கேப்டனாகிய விராட்கோலி...! டுவிட்டரில் கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்...! எப்படி தெரியுமா?
முன்னணி ஆங்கில கிரிக்கெட் இணையதளம் தவறுதலாக விராட்கோலிதான் இந்திய கேப்டன் என்று குறிப்பிட்டுள்ளது. இதை ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அந்த நாட்டில் உள்ள பார்ல் நகரில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் ரன்களை பல்வேறு ஆங்கில இணையதளங்களும் நேரடியாக ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையில், கிரிக்கெட் தகவல்களை, பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் ரன் நிலவரங்களை நேரலையில் ஒளிபரப்பும் முன்னணி ஆங்கில கிரிக்கெட் வலைதளம் இன்றைய இந்தியா – தென்னாப்பிரிக்கா போட்டி ஸ்கோர்களையும் நேரலையாக ஒளிபரப்பி வருகிறது.
இந்த நிலையில், அந்த வலைதளம் இன்று களமிறங்கும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி என்று குறிப்பிட்டுள்ளது. விராட்கோலி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில், விராட்கோலியை மீண்டும் கேப்டன் என்ற அடைமொழியுடன் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அந்த ஸ்கிரீன்ஷாட்களை தற்போது டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக, உலகின் தலைசிறந்த வீரரான விராட்கோலி, இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பு வகித்தார். பின்னர் ஐ.பி.எல். தொடர்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகள், இதுவரை எந்த ஐ.சி.சி. சாம்யின்ஷிப்பையும் வெற்றி பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து, கடந்தாண்டு இந்திய அணியின் டி20 கேப்டன்சியில் இருந்து விலகினார். அதற்கு முன்பாக, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி நீக்கப்பட்டார். பின்னர், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக கோலி பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி ஆடியதால் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து, ஏற்பட்ட பல்வேறு விமர்சனங்கள் காரணமாக விராட்கோலி தனது கேப்டன்சியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எந்தவொரு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப்பை கைப்பற்றாவிட்டாலும் விராட்கோலியின் தலைமையில்தான் இந்திய அணி பல்வேறு சாதனை வெற்றிகளைப் படைத்தது. குறிப்பாக, இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் விராட்கோலி.
இவ்வாறு பவ சாதனைகளை தன்வசம் வைத்திருந்த விராட்கோலி முழுவதுமாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது பலரும் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதன்காரணமாகவே, மீண்டும் கோலியை கேப்டன் என்ற பொறுப்பில் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்,
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்