Ind vs Pak: குல்தீப் சுழலில் திணறிய பாகிஸ்தான்! காப்பாற்றிய ஷாஹீன் அஃப்ரிடி.. இந்தியாவுக்கு 128 ரன்கள் இலக்கு
Asia Cup: ஷாஹீன் அப்ரிடியின் அதிரடியான பேட்டிங்களால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.

Ind vs Pak : இந்தியாவுக்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது
இந்தியா vs பாகிஸ்தான்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு ஆசியக்கோப்பை டி20 போட்டி துபாய் நடைப்பெற்று வருகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு நடைப்பெறும் இந்த போட்டிக்கு பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதல் ஓவரிலேயே விக்கெட்:
போட்டியின் முதல் பந்திலேயே பாக் கேப்டன் சயீம் அயூப் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக முகமது ஹாரிஸ் களமிறங்கினார், அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தலாம் என்று பாக் முயற்சி செய்தாலும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். ஹாரிஸ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையை கட்டினார்.
போராடிய ஃபார்ஹான்:
ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஃபார்ஹான் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து இருந்தது. இதற்கிடையில் அனுபவ வீரர் ஃபாக்கார் ஜமன் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கலக்கிய குல்தீப்:
இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் 6 க்கும் குறைவாகவே இருந்தது. வருண், அக்சர் மற்றும் குல்தீப் ஸ்பின் தாக்குதலில் பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர். குறிப்பாக குல்தீப் யாதவ் தனது 2வது ஓவரில் அடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பாக் அணியை திக்குமுக்காட செய்தார் குல்தீப் யாதவ்
ஷாஹீன் அப்ரிடி அதிரடி:
நிதனமாக ஆடிய ஃபார்ஹான் 40 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க பாக் அணி 100 ரன்களை கடக்குமா என்கிற நிலை இருந்தது, ஆனால் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை 100 ரன்களை கடக்க செய்தார். அவரது அதிரடியான பேட்டிங்களால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டும், அக்சர், பும்ரா தலா 2 விக்கெட்டும் எடுத்து அசத்தினர். பாக் தரப்பில் அதிகப்பட்சமாக ஃபர்ஹான் 40(44) ரன்களும், அதிரடியாக விளையாடிய அப்ரிடி 4 சிக்சர்கள் விளாசி ஆட்டமிழக்கமால் 33 ரன்களும் எடுத்தார்.





















