IND vs NZ ODI: முதுகு வலியால் வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயர்.. நியூசிலாந்து எதிராக புது அதிரடி வீரரை களமிறக்கிய இந்தியா..!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார்.
இந்திய அணி இலங்கை அணியுடனான சுற்றுப்பயணத்தை முடித்துள்ள நிலையில், இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் நியூசிலாந்துடன் ஆட உள்ளது. இதற்காக நியூசிலாந்து அணி ஏற்கனவே இந்தியாவிற்கு வந்துவிட்டது.
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா – நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் ஹைதராபாத்திற்கு சென்று ஹைதராபாத் மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
சொந்த நாட்டில் ஆடுவது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளதால், இந்திய அணி தன்னம்பிக்கையுடன் களமிறங்கும். இந்திய அணிக்கு பெரும் பலமாக விராட்கோலி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்.
இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக கலக்கிய ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளதாக அகில இந்திய மூத்த தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
UPDATE - Team India batter Shreyas Iyer has been ruled out of the upcoming 3-match ODI series against New Zealand due to a back injury.
— BCCI (@BCCI) January 17, 2023
Rajat Patidar has been named as his replacement.
More details here - https://t.co/87CTKpdFZ3 #INDvNZ pic.twitter.com/JPZ9dzNiB6
நாளை (ஜனவரி 18ம் தேதி) ஹைதராபாத்தில் நியூலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா விளையாடுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரஜத் படிதார், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக்.
ரோகித்சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் சுப்மன்கில், இஷான்கிஷான், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பெரும் பலமாக அமைந்துள்ளனர்.
பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் வேகத்தில் பலமாக உள்ளனர். சுழலில் குல்தீப்யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர்.
வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் டாம் லாதம் தலைமையில் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு தூணாக ஆலன், கான்வே, பிலிப்ஸ், ப்ரேஸ்வெல், சாப்மென் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை ஆடம் மிலனே, மேட் ஹென்றி, பெர்குசன் உள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய விராட்கோலி இந்த தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 113 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 55 போட்டியில் இந்தியாவும், 50 போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. சொந்த மண்ணில் இந்திய அணி தலா 26 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.