IND vs ENG: எவ்ளோ அடிச்சாலும் பத்தாது..! 400 ரன்களுக்கு மேல் ஏன் டார்கெட் வைக்கனும்? பிட்ச் அப்படி ப்ரோ
சேசிங்கிற்கு மிகவும் சாதகமான லீட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் இங்கிலாந்திற்கு இலக்கை நிர்ணயிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஹெடிங்லேவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 471 ரன்களை குவித்த நிலையில், தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ஒல்லி போப்பின் சதம், ஹாரி ப்ரூக்கின் 99 ரன்கள் உதவியால் 465 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்தது. தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா நேற்று ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் விக்கெட்டை இழந்து 90 ரன்கள் எடுத்தது.
இமாலய இலக்கு நிர்ணயிக்க வேண்டியது ஏன்?
இந்திய அணி 2 விக்கெட்டை இழந்த நிலையில் தற்போது கே.எல்.ராகுல் - சுப்மன்கில் ஜோடி ஆடி வருகிறது. தற்போது இரண்டாவது இன்னிங்சில் ஆடி வரும் இந்திய அணி இங்கிலாந்திற்கு இமாலய இலக்கை நிர்ணயி்க்க வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.
எவ்ளோ அடிச்சாலும் பத்தாது:
ஏனென்றால், தற்போது போட்டி நடந்து வரும் லீட்ஸ் மைதானம் சேசிங்கிற்கு மிகவும் உகந்த மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்திற்கு எதிராக 404 ரன்களை எட்டி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி 1948ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு கிடைத்தது. சமீபத்தில் 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 362 ரன்களை எட்டியது.
இந்த மைதானம் சேசிங்கிற்கு பக்கபலமாக இருப்பதால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் இலக்காக நிர்ணயிக்க வேண்டியது அவசியம் ஆகும். போட்டியின் 4வது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கேப்டன் சுப்மன்கில் 8 ரன்களில் அவுட்டானார். கையில் 7 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில், இந்திய அணி வலுவான இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே இ்ங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற முடியும். அல்லது போட்டியை டிரா செய்ய முடியும். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 29 டெஸ்ட் போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 36 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
வலுவான பேட்டிங வரிசை:
குறைந்த ரன்கள அவர்களுக்கு இலக்காக நிர்ணயித்தால் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகிய வலுவான பேட்டிங்கை சமாளிக்க முடியும். இதனால், இன்றைய நாளில் இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இந்த போட்டியை வெற்றியுடன் தொடங்கினால் இந்திய அணிக்கு மிகப்பெரிய உத்வேகம் கிடைக்கும்.
இதனால், இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகிய பந்துவீச்சாளர்கள் கையிலே உள்ளது. மைதானம் வேகத்திற்கு ஒத்துழைப்பதால் வேகப்பந்துவீச்சாளர்கள் பங்களிப்பை வெற்றியை வசப்படுத்தும்.




















