மேலும் அறிய

IND VS ENG Test Series: தொடரை வென்ற இந்தியா; கோப்பையுடன் சாதனைகளை அள்ளிக்கொண்டு வந்த வீரர்கள்; லிஸ்ட் இதோ

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலம் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது மட்டும் இல்லாமல் பல்வேறு சாதனைகளை அணியாகவும் வீரர்களாகவும் படைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த தொகுப்பில் காணலாம். 

  • இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுடைய 100வது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆகும். இந்த போட்டியில் அஸ்வின் மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 147 ஆண்டுகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒருவர் தனது அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 
  • இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் கைப்பற்றிய 5 விக்கெட்டுகள் மூலம், 36 முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து, அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 
  • இந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய குல்தீப் யாதவ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 
  • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நாயகனாக யெஸ்யெஷ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் இந்த தொடரில் இரண்டு இரட்டைச் சதம், ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் என மொத்தம் இந்த தொடரில் மட்டும் 712 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்தது மட்டும் இல்லாமல் ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கு மேல் குவித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுனில் கவாஸ்கருக்குப் பின்னர் பெற்றுள்ளார். 
  • ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். அவர் இந்த தொடரில் மொத்தம் 26 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 
  • இதுமட்டும் இல்லாமல் இந்திய அணி இந்த தொடரை தோல்வியுடனே தொடங்கியது. முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி அதன் பின்னர் நடைபெற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது மட்டும் இல்லாமல், தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன் மூலம் 112 ஆண்டுகால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரை 0 - 1 என்ற கணக்கில் தொடங்கி, 4 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தனிச் சாதனை படைத்துள்ளது.
  • 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் டாப் ஐந்து வீரர்கள் அரைசம் விளாசி சாதனை படைத்துள்ளனர். 

இங்கிலாந்து வீரர்கள் செய்த சாதனைகள்

  • இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார். இதுமட்டும் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget