மேலும் அறிய

IND vs ENG 4th Test: பேஸ்பால் இங்கிலாந்தை நையப்புடைத்த ரோகித்தின் இளம்படை - டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா

IND vs ENG 4th Test Day 4 Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி, 3-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது.

IND vs ENG 4th Test Day 4 Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி அபார வெற்றி:

ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த போது, 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து, 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். தொடர்ந்து, கில் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோலி, கே.எல். ராகுல், பும்ரா, ஷமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாருமே இன்றி,  போதிய அனுபவமே இல்லாத இளம்படையினரை கொண்டு, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. பேஸ்பால் கிரிக்கெட் என்ற பாணியில் டெஸ்ட் போட்டிகளை அணுகி வந்த பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. 

போட்டியின் சுருக்கம்:

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 122 ரன்கள் குவித்தார்.  அவருக்கு உறுதுணையாக ஒல்லி ராபின்சன் 58 ரன்களையும், ஃபோக்ஸ் ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் இளம் வீரர் துருவ் ஜுரெல் 90 ரன்களை எடுக்க, ஜெய்ஷ்வால் 73 ரன்களை சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் பஷிர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பில் கிராவ்லி அதிகபட்சமாக 60 ரன்களை சேர்க்க, அஷ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 192 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 55 ரன்களையும், சுப்மன் கில் 52 ரன்களையும் சேர்த்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுரெல் 39 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

டெஸ்ட் தொடர்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும், அதிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி அடுத்தடுத்து 3 போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது. இதன் மூலம், 2012ம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற மோசமான சாதனை இன்னும் தொடர்கிறது. இதையடுத்து, தொடரின் கடைசிப் போட்டி, மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget