IND vs ENG Test: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சொதப்பல் பேட்டிங்; 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒல்லி போப்பின் அசாத்திய பேட்டிங்கால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு எதிராக 230 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதஅன் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. அதிலும் குறிப்பாக தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸின் இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 420 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 4வது நாள் ஆட்டம் என்பதால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இருந்ததால், இந்திய அணி வீரர்கள் தங்களது விக்கெட்டினை இழக்கத்தொடங்கினர். குறிப்பாக டார் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா 39 ரன்களும், ஜெய்ஸ்வால் 15 ரன்களும் கில் ரன் ஏதும் எடுக்காமலும் தனது விக்கெட்டினை இழந்தனர். அதன் பின்னர் வந்த கே.எல். ராகுல், அக்சர் பட்டேல், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை அணியின் ஸ்கோர் 119 ரன்களாக இருந்த போது இழந்தனர். 119 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணியின் வெற்றிக்கு இருந்த நம்பிக்கை, ஷிகர் பரத் மற்றும் அஸ்வின் ஆகியோர்தான். ஆனால் அவர்களும் தங்களது விக்கெட்டுகளை அணியின் ஸ்கோர் 176 மற்றும் 177 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது இழந்தனர். அதன்பின்னர் வந்த இந்திய அணி வீரர்கள் அணியின் தோல்வி வித்தியாசத்தை குறைத்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டும் எடுத்து, 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசிய இங்கிலாந்து அணியின் ஒல்லி போப்க்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.