IND Vs Match 1st T20I: இந்தியா Vs வங்கதேசம் - முதல் டி20 போட்டியில் இன்று மோதல் - சூர்யகுமாரின் படை சாதிக்குமா?
IND Vs Match 1st T20I: இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிர்க்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
IND Vs Match 1st T20I: இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிர்க்கெட் போட்டி, குவாலியரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவில் வங்கதேசம் சுற்றுப்பயணம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் அபாரமான திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது.
இந்தியா Vs வங்கதேசம் - முதல் டி20 போட்டி:
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு குவாலியரில் தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் Sports18 Network அலைவரிசையிலும், ஒடிடி செயலியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டுவதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி நிலவரம்
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிங்கு சிங் என இளம் நட்சத்திர வீரர்கள் நிரம்பியுள்ளனர். இதனால் பேட்டிங் லைன் - அப் மிகவும் வலுவாக உள்ளது. அதோடு பந்துவீச்சிலும், ஹர்ஷித் ராணா மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். மேலும், உள்ளூர் மைதானத்தில் போட்டி நடைபெறுவது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக திகழ்கிறது.
நேருக்கு நேர்:
சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 14 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 13 முறையும், வங்கதேச அணி ஒரே ஒரு முறை மட்டுமும் வெற்றி பெற்றுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
குவாலியரில் உள்ள ஸ்ரீமந்த் மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்வதைத் தேர்வுசெய்து போர்டில் ஒரு பெரிய இலக்கை நிர்ணயிப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.
வங்கதேசம்: லிட்டன் தாஸ், டான்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப்.