மேலும் அறிய

IND vs BAN 2nd Test: 231 ரன்களில் சுருண்ட வங்கதேசம்..! இந்தியாவிற்கு 145 ரன்கள் இலக்கு..!

IND vs BAN 2nd Test, Day 3: இந்திய அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது விளையாடி வருகிறது. 

இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்றது. 

இந்தியா அபாரம்:

இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் டாக்கா மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் மொமினுல் ஹக் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி  அவர் 157 பந்துகளை எதிர்கொண்டு 84 ரன்கள் குவித்தார். பிற வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் அவுட்டாக, வங்கதேச அணி 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது. 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய  இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் 10 ரன்களும், சுப்மன் கில் 20 ரன்களும், புஜாரா, விராட்கோலி தலா 24 ரன்களும் எடுத்து அவுட்டாயினர். தொடர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஐந்தாவது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினர். 

வங்கதேசம் போராட்டம்

இருவரும் பார்ட்னர்ஷிப் போட்டு 159 ரன்கள் குவித்த நிலையில் ரிஷப் பண்ட் 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் சதத்தை தவறவிட்டார். இதேபோல் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக இந்திய அணி 86.3 ஓவர்களில் 314 ரன்களில் ஆல்-அவுட்டானது. வங்கதேச அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் ஷகிப் அப் ஹசன் மற்றும் தைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதனையடுத்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 80 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், 3 நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடக்க வீரர் நஜ்முல் ஹொசைச் 5 ரன்களில் வெளியேற, 3 வதாக களமிறங்கிய மொமினுல் 5 ரன்களில் சிராஜ் பந்தில் பண்ட்டிடம் கேட்சானார். தொடர்ந்து கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹ்மான் வெளியேறினார். மறுமுனையில், தொடக்க வீரர் ஜகிர் ஹாசன் நங்கூரம் போல் நின்று அரைசதம் கடந்து உமேஷ் பந்துவீச்சில் சிராஜிடம் கேட்சானார். 

145 ரன்கள் இலக்கு:

அடுத்து உள்ளே வந்த லிட்டன் தாஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துல் 73 ரன்களில் வெளியேற, மெகிடி டக் அவுட்டாகி நடையைக்கட்டினார். நுரூல் ஹாசன் 31 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 1 ரன்னுடம், கலீல் அஹமது 4 ரன்களுடனும் அவுட்டானார்கள். தஸ்கின் அஹமது மட்டும் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். 

தற்போது இந்திய அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget