Viral Video: பரபரப்பான மேட்ச்க்கு மத்தியில் சுப்மன் கில்லை ரேக்கிங் செய்யும் விராட் கோலி - வீடியோ வைரல்..!
4வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லுக்கும் இடையிலான உரையாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ரன் மிஷின் என அழைக்கபடுபவரான விராட் கோலி, இந்திய அணியின் தொடக்க மற்றும், இளம் வீரராகிய சுப்மன் கில்லின் கையை முறுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Virat and shubman gill 😂👌 pic.twitter.com/XSPwQ2umPZ
— ABHISHEK (@VIRAT18KOHLI_) March 11, 2023
அந்த வீடியோவின் படி, இந்திய அணி ஃபீல்டின் செய்துகொண்டு உள்ளது. அப்போது, ஃபீல்டிங் செய்து கொண்டுள்ள சுப்மன் கில்லிடம் செல்லும் விராட் அவருக்கு மிகவும் நெருக்கமாக சென்று அவரின் காதில் எதையோ சொல்கிறார். அதன் பின்னர் கில்லின் இடது கையைப் பிடித்து சுப்மன் முறுக்குகிறார். விராட்டிடம் இருந்து சுப்மன் நழுவிச் சென்று விடுவார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




















