மேலும் அறிய
IND vs AUS 3rd ODI: விக்கெட்டுகள் வீழ்த்தியும், பவுலிங்கில் சொதப்பிய இந்தியா; வெற்றிக்கு 270 ரன்கள் தேவை..!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 269 ரன்கள் சேர்த்துள்ளது
![IND vs AUS 3rd ODI: விக்கெட்டுகள் வீழ்த்தியும், பவுலிங்கில் சொதப்பிய இந்தியா; வெற்றிக்கு 270 ரன்கள் தேவை..! IND vs AUS 3rd ODI 1st Innings Highlights Australia Sets 270 Runs Target Against India Chepauk Stadium IND vs AUS 3rd ODI: விக்கெட்டுகள் வீழ்த்தியும், பவுலிங்கில் சொதப்பிய இந்தியா; வெற்றிக்கு 270 ரன்கள் தேவை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/3f0e2efabca493a31f9bb59cde81fc6b1679486471996224_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டியாக மூன்றாவது போட்டி உள்ளது.
மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ட்ராவிஸ் ஹெட் மற்றும் மிட்ஷெல் மார்ஷ் சிறப்பான தொடக்கத்தினை ஏற்படுத்தி தந்தனர். முதல் 10 ஓவர்களில் இருவரும் இணைந்து 60 ரன்களுக்கு மேல் எடுத்தனர். அதன் பின்னர் 11 ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா தான் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். 11 ஓவரின் 5வது பந்தில் ட்ராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் சேர்த்து இருந்தது.
ஸ்மித் டக்-அவுட்
ஹர்திக் பாண்டியா வீசிய 13 ஒவரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட் ஆக, ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதன் பின்னர் ஹர்திக் பாண்டியா வீசிய 15 ஓவரில் மிட்ஷெல் மார்ஸ் இன்சைடு எஜ்ஜினால் போல்ட் ஆக அஸ்திரேலிய அணி 85 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதன் பின்னர் வந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடி ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஆஸ்திரேலிய அணி ரன்ரேட்டை மட்டும் 5க்கும் குறையாமல் பார்த்துக் கொண்டனர். போட்டியின் கடைசி ஐந்து ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்டுகள் எடுத்த இந்திய அணியால் ஆஸ்திரேலிய அணியை 250 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் யாரும் அரைசதம் அடிக்காவிட்டாலும், அணியில் அனைவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்ஷெல் மார்ஸ் 47 ரன்களும், அலெக்ஸ் கேரி 38 ரன்களும், ட்ரேவிஸ் ஹெட் 33 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியைப் பொறுத்தமட்டில், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் மற்றும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அக்ஷர் பட்டேல் 2 விக்கெட்டுகளும் முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion